Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
சென்னையில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின்போது சுமார் 22.58 டன் பட்டாசு கழிவுகள்

சென்னையில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின்போது சுமார் 22.58 டன் பட்டாசு கழிவுகள்

Posted on October 28, 2019

தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின்போது வெடித்த பட்டாசுகளால் சென்னையில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின்போது சுமார் 22.58 டன் பட்டாசு கழிவுகள் மட்டும் 22.58 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதனால், ஏராளமான பட்டாசு கழிவுகள் சாலை எங்கும் இருந்தன. இந்த பட்டாசு வெடிப்பதால் சேரும் கழிவுகள் அபாயகரமான கழிவுகள் வகையைச் சேர்ந்தவை. எனவே, இந்த கழிவுகளை சாதாரண கழிவுகளோடு சேர்க்காமல் தனியாக மறுசுழற்சி செய்ய வேண்டும். எனவே, பட்டாசு கழிவுகளை அகற்றுவதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதில், சுமார் 22.58 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் 200 வார்டுகள் உள்ளன. இங்கு, தினசரி கொட்டப்படும் குப்பைகளை சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துறை மூலம் தினமும் சேகரிக்கப்படும். இதைத்தவிர, பண்டிகை நாட்களில் குப்பை அகற்ற சிறப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிக்கப்பட்ட பட்டாசு குப்பை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, சென்னை மாநகராட்சி மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதன்மூலம், அக்டோபர் 26, 27 ஆகிய தேதிகளில் 22.58 டன் பட்டாசு கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த கழிவுகளில் வெடி மருந்து உள்ள கழிவுகள் தனியாக பிரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு தீபாவளியின் போது 95 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme