Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
ஸ்கார்பியோ காரில் கடத்தப்பட்ட வெடிபொருள் பறிமுதல்

ஸ்கார்பியோ காரில் கடத்தப்பட்ட வெடிபொருள் பறிமுதல்

Posted on October 22, 2019

ஸ்கார்பியோ காரில் கடத்தப்பட்ட வெடிபொருள் பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் காரில் அனுமதியின்றி எடுத்துச் செல்லப்பட்ட 650 கிலோ வெடிபொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பண்டா மாவட்டத்தில் போலீசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஸ்கார்ப்பியோ நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். ஆனால் எச்சரிக்கையை மீறி கார் வேகமாகச் சென்றதால் அதிர்ச்சியடைந்த போலீசார் அதனை விரட்டிச் சென்றனர்.

போலீசார் விரட்டுவதையறிந்த காரின் ஓட்டுநர் மகோபாக மலைப்பகுதியில் காரினை நிறுத்தி விட்டு தப்பி ஓடினார். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் காருக்குள் 650 கிலோ அம்மோனியம் நைட்ரேட் என்ற வெடிபொருள் இருந்தது தெரியவந்தது. அதனைப் பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme