Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

12 ஆழ்வார்களாலோ, 63 நாயன்மார்களாலோ, ‘இந்து’ என்கின்ற மதக்குறிப்பு சொல்லப்படவில்லை”-கமல்

Posted on May 18, 2019

12 ஆழ்வார்களாலோ, 63 நாயன்மார்களாலோ, ‘இந்து’ என்கின்ற மதக்குறிப்பு சொல்லப்படவில்லை”-கமல்

அரவக்குறிச்சி தொகுதி பிரச்சாரத்தின் போது, ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து’ என்று கமல் பேசியது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தி, கண்டங்களை பலரும் தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில் கமல், ‘தமிழா நீ தலைவனாக வேண்டும். இதுவே என் வேண்டுகோள்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், “சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தையும் நிறுத்த நினைக்கின்றனர் மத்திய / மாநில அரசுகள். மக்கள் எடுத்துவிட்ட முடிவை தாமதப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது. 12 ஆழ்வார்களாலோ, 63 நாயன்மார்களாலோ, ‘இந்து’ என்கின்ற மதக்குறிப்பு சொல்லப்படவில்லை. முகலாயர் அல்லது அதற்கு முன் ஆள வந்தாராலோ ‘இந்து’ என நாமகரணம் செய்யப்பட்டோம். ஆண்டு அனுபவித்துச் சென்ற ஆங்கிலேயர் அந்த அடைமொழியை வழிமொழிந்தனர்” என்றும், “நாம் ‘இந்தியர்’ என்கின்ற அடையாளம் சமீபத்தியது தான் எனினும் காலம் கடந்து வாழக்கூடியது. நாம், நம் அகண்ட தேசத்தை மதத்திற்குள் குறுக்க நினைப்பது வர்த்தக/அரசியல் மற்றும் ஆன்மீக ரீதியாகவும் பிழையான தேர்வாகும்.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று எத்தனை முறை தமிழனுக்கு பழமொழி சொல்லியிருக்கின்றோம். ‘கோடி’ன்ன உடனே ‘பணம்’ ஞாபகம் வந்தால் நீ தலைவன் அல்ல, அரசியல்வாதி அல்ல. வெறும் வியாதி” என்று பதிவு செய்துள்ளார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • சென்னையில் 7-வது தேசிய அளவிலான எண்கணிதப் போட்டி அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார் இதில் 2500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர்கள் பங்கேற்று பயன் பெற்றனர்
  • *இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்*
  • அன்பே டயானா’ வரும் ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
  • பாடகி எஸ்.ஜானகி மறைவுக்கு இயக்குநர் டி.ராஜேந்தர் இரங்கல் செய்தி
  • துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் !!*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme