Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
பரூக் அப்துல்லாவின் சகோதரி, மகள் ஆகியோர் கைது

பரூக் அப்துல்லாவின் சகோதரி, மகள் ஆகியோர் கைது

Posted on October 16, 2019

பரூக் அப்துல்லாவின் சகோதரி, மகள் ஆகியோர் கைது

அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக பெண்களைத் திரட்டி போராட்டம் நடத்த முயன்ற பரூக் அப்துல்லாவின் சகோதரி மற்றும் மகளை ஸ்ரீநகரில் போலீசார் கைது செய்தனர்.

லால் சௌக் எனுமிடத்தில் நேற்று போராட்டம் நடத்த பெண்கள் திரண்டனர். இதற்கு தலைமை வகித்த பரூக் அப்துல்லாவின் சகோதரி சுரையா மற்றும் வீட்டில் கருப்புக் கொடி ஏற்றி, போராட்டத்தில் ஈடுபட்ட மகள் சாபியா ஆகியோர் துணை ராணுவத்தின் மகளிர் பிரிவு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் மணப்பெண்கள் விற்பனைக்கு அல்ல என்ற பதாகைகளையும் கருப்பு கைவளையங்களையும் அணிந்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆகஸ்ட் 5ம் தேதி சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டார். அவர் மீது பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • சென்னையில் 7-வது தேசிய அளவிலான எண்கணிதப் போட்டி அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார் இதில் 2500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர்கள் பங்கேற்று பயன் பெற்றனர்
  • *இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்*
  • அன்பே டயானா’ வரும் ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
  • பாடகி எஸ்.ஜானகி மறைவுக்கு இயக்குநர் டி.ராஜேந்தர் இரங்கல் செய்தி
  • துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் !!*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme