Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா

Posted on October 11, 2019

இந்திய கிரிக்கெட் வாரிய தேர்தலில் பங்கேற்க 8 சங்கங்களுக்கு தடை அதிகாரபூர்வ அறிவிப்பு. இதில் யார் யார் கலந்து கொள்ள தகுதியானவர்கள் என்பதை இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தலை நடத்தும் அதிகாரி கோபால்சாமி வெளியிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தில் அங்கம் வகிக்கும் மாநிலம், யூனியன் பிரதேசங்கள் மற்றும் அரசு விளையாட்டு அமைப்புகள் என்று மொத்தம் 38 கிரிக்கெட் சங்கங்களின் உறுப்பினர்களில் 8 சங்கங்களுக்கு கூட்டத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது மணிப்பூர், உத்தரபிரதேசம், தமிழ்நாடு, அரியானா, மராட்டியம், ரெயில்வே, சர்வீசஸ், அகில இந்திய பல்கலைக்கழக சங்கம் ஆகிய கிரிக்கெட் சங்கங்கள் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தலில் ஓட்டுபோடும் உரிமையை இழக்கிறது. இதில் சர்வீசஸ், ரெயில்வே, பல்கலைக்கழகம் ஆகியவை கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கத்தை தொடங்காததாலும், மற்ற மாநிலங்கள் கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைக்குட்பட்டு மாநில நிர்வாகிகள் தேர்தலை நடத்தாததாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடையை எதிர்த்து மாநில கிரிக்கெட் சங்கங்கள் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட முடிவு செய்துள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • *முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு இயக்குநர் சீனு ராமசாமியின் கோரிக்கை!*
  • புதிய மினி கூப்பர் எஸ் ஜிபி இன்ஸ்பயர்ட் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்இதுவரை வெளிவந்ததிலேயே மிகவும் வேகமான, சக்திவாய்ந்த மற்றும் ஈடு இணையற்ற ‘மினி ஜிபி’ (MINI GP) காரால் ஈர்க்கப்பட்டு இது உருவாக்கப்பட்டுள்ளது.
  • காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி (The India Story) படத்தின் டீசர் விரைவில் வெளியீடு
  • கான் சிட்டி” வரும் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது !!
  • India, Get Ready to Experience Dhurandhar Like Never Before — RAW and Undekha on JioHotstar from May
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme