பிக்பாஸ் தர்ஷனை ராஜாவாக மாற்றி… மற்றவர்களை ஆட்டி படைக்கும் மஹத் – யாஷிகா..

biggboos tamil 3-indiastarsnow.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோவிலேயே இன்றைய தினம், பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினர்களாக, சீசன் 2 போட்டியாளர்களான யாஷிகா ஆனந்த் மற்றும் மஹத் ஆகியோர் வீட்டிற்குள் வரும் காட்சி காட்டப்பட்டது.

இதை தொடர்ந்து இவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் தற்போது விளையாடி வரும் மற்ற போட்டியாளர்களை எப்படி, ஆட்டி படைக்கிறார்கள் என்பது குறித்த புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த ப்ரோமோவில், மஹம் பிக்பாஸ் இவர்களை வைத்து ஏதாவது பண்ணலாமா என கேட்கிறார். இதற்கு பின், தர்ஷனை அழைத்து அவருக்கு கிரீஜிடம் சூட்டி, அவரை மன்னார் போல் உடைகள் அணிவிக்கிறார்கள்.

தர்ஷனுக்கு முகேன் மற்றும் லாஸ்லியா ஆகியோர் அவருக்கு வேண்டியவற்றை செய்ய வேண்டும் என்றும், கவின் மற்றும் ஷெரின் மன்னர் தூர தேசம் போக விரும்பினால், அவரை தூக்கி செல்ல வேண்டும் என பிக்பாஸ் கூறுகிறார். சாண்டி மன்னர் செல்லும் போது, ராஜாதி ராஜா, ராஜா மாத்தாண்ட, என புகழ் பாடி கொண்டே இருக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்படுவதும். இதனை மற்ற போட்டியாளர்கள் செய்வது இந்த ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.

அந்த ப்ரோமோ இதோ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *