Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
Jackie-Chan-pretended-to-be-hurt-to-be-close-to_indiastarsnow.com

என்டர் த ட்ராகன் படத்தில் புரூஸ் லீயுடன் ஒரு காட்சியில்

Posted on September 24, 2019

புரூஸ் லீயின் மகள் ஷானன் லீ, இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து உள்ளார். லீயுடன் சண்டையிடுவதை ஜாக்கி காணக்கூடிய படத்தின் கிளிப்களும் வீடியோவில் உள்ளது. ஜாக்கிசான் 1970-களில் ஸ்டண்ட்மேனாக பணியாற்றினார்.

புரூஸ் லீ நடிப்பில் 1973-ம் ஆண்டு வெளியான படம் ‘என்டர் தி ட்ராகன்’. உலகமெங்கும் பெரும் வெற்றியைக் குவித்த இந்தப் படத்தில் ஜாக்கி சான் ஒரு காட்சியில் தோன்றியிருப்பார். படத்தில் புரூஸ் லீ ஒரு அடியாள் கும்பலைத் தாக்குவது போன்ற ஒரு காட்சியில் புரூஸ் லீயிடம் அடிவாங்கும் அடியாட்களில் ஒருவராக ஜாக்கிசான் நடித்திருப்பார்.

அந்த வீடியோவில் ஜாக்கிசான் கூறியிருப்பதாவது:-Jackie-Chan-pretended-to-be-hurt-to-be-close-to_indiastarsnow.com

”என்டர் த ட்ராகன்’ படத்தில் புரூஸ் லீயுடன் ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தேன். அவரிடம் அடிவாங்க வேண்டும். எனக்குப் பின்னால் கேமரா இருந்தது. எனக்கு முன்னால் புரூஸ் லீ இருந்தார். நான் அவரை நோக்கி ஓடிச் சென்றேன். திடீரென எனது கண்கள் இருட்டிவிட்டன. அப்போது தான் அவர் ஒரு குச்சியை வைத்து என்னை அடித்ததை உணர்ந்தேன். எனக்கு மயக்கம் வந்துவிட்டது. நான் புரூஸ் லீயைப் பார்த்தேன். அவரோ இயக்குநர் கட் சொல்லும்வரை நடித்துக் கொண்டே இருந்தார்.

பின்னர் குச்சியைத் தூக்கி எறிந்து விட்டு என்னை நோக்கி ஓடி வந்து, என் தலையை தூக்கி ‘மன்னித்து விடு’ என்று கூறினார். எனக்கு வலி போய்விட்டது. நான் அப்போது இளைஞனாகவும் வலிமையாகவும் இருப்பேன். ஆனால் புரூஸ் லீ என்னைப் பிடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக வலிப்பது போல நடித்தேன். அன்று முழுவதும் அப்படியே செய்து கொண்டிருந்தேன்”.

இவ்வாறு ஜாக்கி சான் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.jacke chan

‘என்டர் த ட்ராகன்’ வெளியாவதற்கு ஒரு மாதம் முன்னதாகவே புரூஸ் லீ இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • கோலாகலமாக நடைபெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா*
  • நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
  • ஜீவா  லார்க் ஸ்டூடியோஸ் கூட்டணியில் – ‘தகப்பன்’ பூஜையுடன் இனிதே தொடக்கம்!
  • பூச்சிக்கொல்லி விவசாயத்தின் இருண்ட உண்மையை வெளிச்சம் போட்டு காட்டும் காஜல் அகர்வால் –ஷ்ரேயாஸ் தல்படே  நடித்த “தி இந்தியா ஸ்டோரி”  டிரெய்லர் வெளியானது!!
  • *‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் முதல் பாடலான ‘நீ செல்’ (Nee Sel) பாடலை வெளியிட்ட டி-சீரிஸ்!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme