Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
இந்தியன் 2 அடுத்தகட்டப் படப்பிடிப்புக்காக ஆந்திரா செல்ல உள்ளது

இந்தியன் 2 அடுத்தகட்டப் படப்பிடிப்புக்காக ஆந்திரா செல்ல உள்ளது

Posted on September 13, 2019

கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் வெளியான ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம், 23 வருடங்களுக்குப் பிறகு தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து காஜல் அகர்வால், பிரியா பவானிசங்கர், சித்தார்த், ரகுல் ப்ரீத்சிங், நெடுமுடி வேணு, சமுத்திரக்கனி, விவேக், வித்யுத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராகப் பணியாற்றும் இந்த படம், 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீசாகும் என தெரிகிறது. சித்தார்த் – ரகுல் ப்ரீத்சிங் சம்பந்தப்பட்ட காட்சிகள், இந்தியன் தாத்தா பங்குபெற்ற சண்டைக்காட்சி ஆகியவை முதல் கட்டப் படப்பிடிப்பில் படமாக்கப்பட்டுள்ளன.

சண்டைப் பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன் இந்த சண்டைக்காட்சியை வடிவமைத்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் இந்த சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, அடுத்தகட்டப் படப்பிடிப்புக்காக ஆந்திரா செல்ல உள்ளது. ‘பிக் பாஸ் 2’ மற்றும் அரசியல் பணிகளுக்கு இடையேயும் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்துக்காக நேரம் ஒதுக்கி படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்கமல்ஹாசன்பெருமையுடன் வழங்கும்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும்”தர்மன்”இயக்கம்: அஸ்வத் மாரிமுத்து
  • சிங் கீதம் திரை விமர்சனம்
  • அந்தரன் திரை விமர்சனம்
  • அனந்தன் காடு திரை விமர்சனம்
  • *கோபம், வஞ்சம், வெற்றி – மனதின் போராட்டத்தை சொல்லும் “வஞ்சம் தீர்” பாடல்!*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme