Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
Hide gvprakash upcoming movie-www.indiastarsnow

பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் கே ப்ரொடக்ஷன்சுடன் இணையும் ஜிவி பிரகாஷ் குமார்

Posted on September 12, 2019

பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் கே ப்ரொடக்ஷன்சுடன் இணையும் ஜிவி பிரகாஷ் குமார்

தமிழ் சினிமாவில் தரமான படங்களை தயாரித்து வெளியிடுவதில் முனைப்போடு செயல்பட்டு வரும் நிறுவனம் கே ப்ரொடக்ஷன்ஸ். இந்நிறுவனம் சார்பில் எஸ். என். ராஜராஜன், ஜிவி. பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார்.
Hide gvprakash upcoming movie-www.indiastarsnow

இந்த புதிய படத்தின் மூலம் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குனராக அறிமுகமாகிறார். ஜிவி. பிரகாஷுக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்க இருக்கிறார். இவர் சீமதுரை , 96, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் வாகை சந்திரசேகர் மற்றும் அறிமுக நடிகர் குணா நடிக்கிறார்கள்.Hide gvprakash upcoming movie-www.indiastarsnow

ஜிவி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இவர் அண்ணனுக்கு ஜே, வெள்ளை யானை படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர். படத்தொகுப்பை எஸ். இளையராஜா கவனிக்கிறார்.Hide gvprakash upcoming movie-www.indiastarsnow

இப்படத்தில் ஜிவி பிரகாஷ் கல்லூரி மாணவராக நடிக்கிறார். ஒரு மாணவனுக்கு கல்லூரிக்கு வெளியே நடக்கும் இன்னல்களை ஆக்ஷன் கலந்து திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். காதல், எமோஷனல், ஆக்ஷன் முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக தயாராக இருக்கிறது. இந்த படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா இன்று (12.9.2019) ஏ.வி.எம் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர்கள் வெற்றிமாறன், சமுத்திரகனி, சுப்ரமணிய சிவா, சரவணன், இளன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
gvprakash upcoming movie-www.indiastarsnow.comgvprakash upcoming movie-www.indiastarsnow.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • கான் சிட்டி” இரண்டாவது சிங்கிள் வெளியீடு…, மாஸாக கவரும் “நான் தான் கிங்கு” பாடல்!
  • சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா – விஜய் சில்லா – சசி தேவி ரெட்டி கூட்டணியில் உருவாகும் ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் அதிரடி கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது !!
  • Tube Light Productions PresentFilmmaker M.R. Bharathi’s DirectorialNawaz & Sherry Agarwal Starrer “CYCLE GAP”
  • டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் வழங்கும், இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கத்தில், நவாஸ் மற்றும் ஷெர்ரி அகர்வால் நடிப்பில் காதல், ஏக்கம் மற்றும் இசையின் மாயாஜாலத்தைக் கொண்டாடும் மியூசிக்கல் ரொமான்ஸ் திரைப்படம்’சைக்கிள் கேப்’!
  • *“பெத்தி”  படம் முடிந்து வெளியே வரும் போது கண்களில் கண்ணீர் இருக்கும்” – தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா* 
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme