Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
Apple_iPhone_11_Pro_www.indiastarsnow.com

இந்தியவில் அறிமுகம் iPhone 11-ன் குறைக்கப்பட்ட ஐபோன்கள் விலை

Posted on September 12, 2019

Phone 11 தொடர் ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தை அடுத்து, ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் அதன் முந்தைய தலைமுறை ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்துள்ளது. இந்த புதிய விலைகள் ஆப்பிள் தளத்தில் எதிரொளித்துள்ளது, அவற்றில் பல ஐபோன் மாடல்களின் விலை குறைந்தே காணப்படுகிறது. iPhone 7 ஸ்மார்ட்போனின் 64GB வகை என்றும் இல்லாத அளவு குறைந்த விலையில் 29,990 ரூபாய் என்ற விலையில் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல iPhone XR-ன் 64GB வகையும் 49,990 ரூபாய் என்ற விலையில் உள்ளது. iPhone XS ஸ்மார்ட்போன் 10,000 ரூபாய் விலைகுறைப்பு பெற்றுள்ளது, iPhone 8 Plus-ன் விலை 49,900 ரூபாயிலிருந்து துவங்குகிறது.
Apple_iPhone_11_Pro_www.indiastarsnow

கடந்த ஆண்டு அறிமுகமான iPhone XS ஸ்மார்ட்போனின் 64GB வகை 89,900 ரூபாய் என்ற விலையில் உள்ளது. மற்றொருபுறம் இந்த ஸ்மார்ட்போனின் 256GB வகை 1,03,900 ரூபாய் என்ற விலையில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமானபோது 64GB வகை 99,900 ரூபாய் என்ற விலையிலும், 256GB வகை 1,14,900 என்ற விலையிலும் இருந்தது. கடைசி விலை குறைப்பு வரை, இந்த ஸ்மார்ட்போன்கள் இதே விலையில்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

iPhone 11: 2 பின்புற கேமரா, A13 பயோனிக் சிப்புடன் அறிமுகம்!
Apple_iPhone_11_Pro_www.indiastarsnow.com

இந்தியாவில் தற்போது ஐபோன் XR-ன் 64GB வகை 49,900 ரூபாய்க்கும் மற்றும் 128GB சேமிப்பு வகை 54,900 ரூபாய்க்கும் விற்பனையில் உள்ளது. இரண்டு வகைகளின் வெளியீட்டு விலையும் அறிமுகத்தின்போது முறையே 76,900 ரூபாய் மற்றும் 81,900 ரூபாய் என்ற அளவுகளில் இருந்தது. முன்னதாக ஏப்ரல் மாதத்தில், இந்தியாவில் ஐபோன் XR-ன் விலை முறையே 59,900 ரூபாய் மற்றும் 64,900 ரூபாய் எனக் குறைக்கப்பட்டது.

iPhone 11 Pro, 11 Pro Max: 3 பின்புற கேமராக்களுடன் அறிமுகம், இந்திய விலை இதோ!
Apple_iPhone_11_Pro_www.indiastarsnow.com

மறுபுறத்தில் iPhone 8 Plus மிகப்பெரிய விலை குறைப்பை பெற்றுள்ளது. அதன்படி, இதன் 64GB வகை 49,900 ரூபாய் என்ற விலையிலும் 128GB வகை 54,900 ரூபாய் என்ற விலையிலும் உள்ளது. கடைசி விலைக்குறைப்பின்போது இந்த ஸ்மார்ட்போனின் 64GB வகை 69,900 ரூபாய் என்ற விலையில் இருந்தது. இதன்மூலம், இந்த ஸ்மார்ட்போன் 20,000 ரூபாய் விலை குறைப்பை பெற்றுள்ளது என்பது தெரிய வருகிறது. இரண்டு வருடங்களுக்கு முன் அறிமுகமான iPhone 8-ன் 64GB வகை 39,900 ரூபாய் மற்றும் 128GB வகை 44,900 ரூபாய் என்ற விலை குறைப்பை பெற்றுள்ளது. கடைசி விலை குறைப்பின்போது, இந்த ஸ்மார்ட்போனின் 64GB வகை 59,900 ரூபாய் என்ற விலையில் இருந்தது. இதன்மூலம், இந்த ஸ்மார்ட்போனும் 20,000 ரூபாய் விலை குறைப்பை பெற்றுள்ளது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • கான் சிட்டி” இரண்டாவது சிங்கிள் வெளியீடு…, மாஸாக கவரும் “நான் தான் கிங்கு” பாடல்!
  • சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா – விஜய் சில்லா – சசி தேவி ரெட்டி கூட்டணியில் உருவாகும் ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் அதிரடி கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது !!
  • Tube Light Productions PresentFilmmaker M.R. Bharathi’s DirectorialNawaz & Sherry Agarwal Starrer “CYCLE GAP”
  • டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் வழங்கும், இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கத்தில், நவாஸ் மற்றும் ஷெர்ரி அகர்வால் நடிப்பில் காதல், ஏக்கம் மற்றும் இசையின் மாயாஜாலத்தைக் கொண்டாடும் மியூசிக்கல் ரொமான்ஸ் திரைப்படம்’சைக்கிள் கேப்’!
  • *“பெத்தி”  படம் முடிந்து வெளியே வரும் போது கண்களில் கண்ணீர் இருக்கும்” – தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா* 
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme