Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
தமிழ் சினிமாவில் 1000 கோடிக்குப் படமெடுத்தாலும் இதுதான் கதி

தமிழ் சினிமாவில் 1000 கோடிக்குப் படமெடுத்தாலும் இதுதான் கதி

Posted on September 11, 2019

தமிழ் சினிமாவில் மெகா பட்ஜெட் படங்களைத் தயாரித்துவரும் லைகா தயாரிப்பு நிறுவனம் தனது அடுத்த படமான காப்பானை ரிலீஸ் மதுரையின் பிரபல கட்டப்பஞ்சாயத்து ஃபைனான்சியர் அன்புச் செழியனின் உதவியை நாடியுள்ளது. இதனால் அந்நிறுவனத்தின் முந்தைய படங்களை வாங்கிய விநியோகஸ்தர்கள் டென்சன் அடைந்துள்ளானர்.
Surya-Kappan-Will-be-released-www.indiastarsnow.com

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா,ஆர்யா,மோகன்லால், சாயிஷா நடித்துள்ள படம் ‘காப்பான்’.இப்படம் கடந்த ஆகஸ்ட் மாதத் துவக்கத்திலேயே திரைக்கு வர இருந்த நிலையில் தயாரிப்பு நிறுவனமான லைகாவின் முந்தைய படம் 2.0வை வாங்கியிருந்தவர்கள் நஷ்ட ஈடு கோரி பஞ்சாயத்து செய்து வந்தனர். ‘காப்பான்’படத்தை ‘2.0’பட நஷ்டத்தைக் கழித்துக்கொண்டு குறைந்த விலைக்குத் தரவேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாக இருந்தது. இதே போல ‘2.0’படத்தின் கேரள உரிமையை வாங்கியிருந்தவரும் அப்படத்துக்கான நஷ்டத்தை காப்பானில் கழிக்கச் சொல்லி கேரள விநியோகஸ்தர் சங்கத்தில் புகார் செய்திருந்தார்.Surya-Kappan-Will-be-released-www.indiastarsnow.comSurya-Kappan-Will-be-released-www.indiastarsnow.com
இது தொடர்பான பேச்சு வார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில் பஞ்சாயத்துப் பார்ட்டிகள் அத்தனை பேரையும் மடக்க, மிகப்பெரிய கட்டப்பஞ்சாயத்துப் பார்ட்டியான மதுரை அன்புச் செழியனின் கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கு 20 கோடிக்கு மொத்தமாக விற்றுவிட்டதாக ஒரு தகவலை அதிகாரபூர்வமாக ரிலீஸ் செய்து அத்தனை விநியோகஸ்தர்களின் வாயையும் அடைத்திருக்கிறது லைகா நிறுவனம். கமலின் ‘இந்தியன் 2’, ரஜினியின் ‘தர்பார்’,’காப்பான்’ என்று தற்போது மட்டும் தமிழ் சினிமாவில் 1000 கோடியை விதைத்திருக்கும் லைகாவின் நிலை பரிதாபத்துக்குரியதுதான்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • SPR India Launches District 12, Redefining Office Ownership for Chennai’s Businesses in an Emerging Commercial Hub
  • லைட் வெயிட் பேபி! ( Light Weight Baby) : விக்கல்ஸ் விக்ரம் – ஆரத்தி கிருஷ்ணா நடிக்கும் படத்தின் 45 நாள் படப்பிடிப்பு நிறைவு : ஆகஸ்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
  • Vikkals Vikram and Arathy Krishna’s Lightweight, Baby! wraps 45-day shoot; first look to be unveiled in August
  • ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே திரை விமர்சனம்
  • துல்கர் சல்மானின் பிறந்தநாளில் ‘AOT’ படத்தின் ‘மிட்டாய் மழை’ பாடல் வெளியீடு
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme