Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

விஜய் பிகில் -கார்த்தி கைதி தீபாவளிக்கு மோதுவது உறுதியானது

Posted on August 29, 2019

அட்லி இயக்கத்தில் விஜய்-நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள ‘பிகில்’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்து உள்ளனர். தீபாவளி பண்டிகையான அக்டோபர் 27-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 24-ந்தேதி வியாழக்கிழமையே படத்தை திரைக்கு கொண்டுவருவது குறித்து படக்குழுவினர் யோசிக்கின்றனர்.

இதுபோல் விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் படமும் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். இதில் கதாநாயகிகளாக ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். விஜய் சந்தர் இயக்கி உள்ளார். படத்தில் இடம்பெற்றுள்ள கமலா என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

பிகில், சங்கத்தமிழன் ஆகிய 2 படங்களும் தீபாவளிக்கு மோதுவது உறுதியான நிலையில் இப்போது கார்த்தி நடித்துள்ள கைதி படத்தையும் தீபாவளி பண்டிகையில் திரைக்கு கொண்டு வருவதாக அறிவித்து உள்ளனர். கைதி படத்தில் ராஷ்மிகா மந்தனா, நரேன், ஜார்ஜ் மரியான், ரமணா, யோகிபாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.

முழுக்க இரவில் எடுக்கப்பட்ட அதிரடி திகில் படமாக கைதி தயாராகி உள்ளது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படம் தீபாவளிக்கு வருவது கார்த்தி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. விஷாலின் ஆக்‌ஷன், தனுசின் பட்டாஸ் ஆகிய படங்களும் தீபாவளிக்கு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • ஜூலை 2 அன்று வெளியாகும் நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான ‘சூப்பர் சுப்பு’வின் டிரெய்லர் வெளியானது!
  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!
  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
  • *சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • *இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme