Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

சிந்து கதாபாத்திரத்தில் நடிக்க தீபிகா படுகோனே

Posted on August 28, 2019

பி.வி. சிந்துவின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தை அருந்ததி, ஒஸ்தி, தேவி ஆகிய தமிழ் படங்களில் வில்லனாக நடித்துள்ள சோனு சூட் தயாரிக்கிறார். பி.வி. சிந்துவின் பயிற்சியாளராக உள்ள முன்னாள் பேட்மிண்டன் வீரர் கோபிசந்த் கதாபாத்திரத்திலும் அவர் நடிக்கிறார்.

இந்த படத்துக்கு ‘சிந்து’ என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. சிந்து கதாபாத்திரத்தில் நடிக்க தீபிகா படுகோனேவிடம் பேசி வருகிறார்கள். அவர் சம்மதிப்பார் என்று தெரிகிறது. இந்த படத்துக்கான திரைக்கதையை ஏற்கனவே தயார் செய்து விட்டனர். இப்போது பி.வி சிந்து உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளதால் கிளைமாக்சை மாற்றுகின்றனர்.

இதுகுறித்து சோனுசூட் கூறும்போது, “சிந்துவின் வாழ்க்கை கதையின் திரைக்கதை வசனத்தை ஏற்கனவே எழுதி முடித்து விட்டோம். இப்போது உலக சாம்பியன் பட்டத்தை சிந்து வென்று இருப்பதால் ஏற்கனவே வைத்திருந்த கிளைமாக்சை மாற்றி புதிய கிளைமாக்ஸ் வைக்க இருக்கிறோம். சிந்து வாழ்க்கையை படமாக்குவது சவால் நிறைந்ததாக இருக்கும்” என்றார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் ‘மாகாளி’ – பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!
  • கட்டா குஸ்தி 2’ வெற்றியை கொண்டாடிய படக்குழு… 50வது நாள் நன்றி அறிவிப்பு விழா!
  • ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!
  • உலகநாயகன் கமல்ஹாசன் உடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு
  • இம்மார்ட்டல் திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme