Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ஸ்டாலின் செய்தியாளருக்கு பேட்டி புலி பதுங்குவது பாய்வதற்குதான்??

Posted on June 30, 2019

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 28ந்தேதி தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, வரும் திங்கட்கிழமை அவை மீண்டும் கூடும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
இதனால் சபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், ஜூலை 1 ஆம் தேதி எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்த போவதில்லை என்று தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறினார்.

இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுத்துக்கொள்ள தேவையில்லை என்று சபாநாயகர் தனபாலிடம் கடிதம் கொடுத்துள்ளோம். அன்றைய சூழலில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்தோம். இப்போதைக்கு அதை வலியுறுத்த போவதில்லை என்றார்.

இந்நிலையில், மு.க. ஸ்டாலின் இன்று கூறும்பொழுது, 3 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க கூடாது என்பதால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாங்கள் திரும்ப பெற்றோம். சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்துவிட்டு, தி.மு.க. பதுங்குவதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், புலி பதுங்குவது பாய்வதற்குதான். பாயவேண்டிய நேரத்தில் பாயும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • அன்பால் தான் விஜய் முதல்வரானார் – ஆகாயம் பட விழாவில் தினம்தோறும் நாகராஜ்!!
  • Karthik Subbaraj’s ‘Dorothy’ Makes World Premiere at TIFF, Marks First Indian Tamil Feature at Festival in a Decade
  • இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’ திரைப்படம் TIFF திரைப்பட விழாவில் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டது!
  • G.D. Naidu, which has transitioned from a steady theatrical run into an international streaming phenomenon.
  • நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவான ‘ஜி.டி.என்.’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் உலகளாவிய டாப் 10 திரைப்படங்களின் பட்டியலில் இடம் பிடித்தது!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme