Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

இந்தியன் பச்சைப் பட்டாணி பூரி

Posted on June 23, 2019

கோதுமை மாவு – 2 கப்,
ரவை – 1 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.

பூரணத்திற்கு:

வேகவைத்து மசித்த பச்சைப் பட்டாணி – 1 கப்,
கரகரப்பாக பொடித்த காய்ந்தமிளகாய், தனியா, மிளகு, சீரகம் – தலா 1 டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் – 1/4 டீஸ்பூன்,
உப்பு, பொரிக்க எண்ணெய் – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

மேல் மாவிற்கு கொடுத்த பொருட்கள் அனைத்தையும் கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பூரி மாவு பதத்திற்கு பிசைந்து மூடி 15 நிமிடத்திற்கு வைக்கவும். கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பூரணத்திற்கு கொடுத்த பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி உதிர் உதிராக வந்ததும் இறக்கவும். பூரணம் ரெடி. பிசைந்த பூரி மாவிலிருந்து எலுமிச்சைப்பழ அளவு உருண்டையாக எடுத்து சொப்பு போல் செய்து 1 டேபிள்ஸ்பூன் பூரணத்தை உள்ளே வைத்து மூடி பூரிகளாக திரட்டிக் கொள்ளவும். கடாயில் பொரிக்க எண்ணெயை ஊற்றி மிதமான தீயில் வைத்து சூடாக்கி திரட்டிய பூரி மாவை போட்டு பொரித்தெடுத்து எண்ணெயை வடித்துக் கொள்ளவும். சாஸ், கிரீன் சட்னி, இனிப்பு சட்னியுடன் பரிமாறவும்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • ஏழாண்டுகளுக்கு பிறகு தன் சமூக ஊடகத்தின் – (INSTA DP)- மாற்றியுள்ள பிரபாஸ்
  • அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –
  • துல்கர் சல்மானின் “ஐ ம் கேம்” ( I Am Game) செப்டம்பர் 3-ம் தேதி ரிலீஸ் ஆகிறது – பிரம்மாண்ட உலகளாவிய வெளியீட்டுக்கு திட்டம்!
  • விஸ்வநாத் அண்ட் சன் திரை விமர்சனம்
  • கிரிப்டோ டு மெத்தபெட்டமைன்… கோவை, சென்னையில் சுதந்திரமாக சுற்றும் போதைப்பொருள் மன்னன்… பாயுமா நடவடிக்கை?
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme