Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

சபரிமலை விவகாரத்தில் கேரளா தேவசம் போர்டு அமைச்சர்??

Posted on June 22, 2019

திருவனந்தபுரம்:
சபரிமலை விவகாரத்தில் பழைய நிலை தொடரும்படி மத்திய அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று கேரளா தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி அனைத்து வயது பெண்களும் சபரிமலையில் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்தத் தீர்ப்பை கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு அமல்படுத்தி வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்தப் போராட்டங்களுக்கு எதிராக ஆளும் சிபிஎம் அரசு பாலின சமத்துவம் குறித்த மனிதச் சங்கிலி போராட்டத்தை கையில் எடுத்தது.

இந்நிலையில் சபரிமலை விவகாரத்தில் மத்திய அரசு ஒரு புதிய சட்டத்தை இயற்றவேண்டும் என்று கேரளா தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பழங்கால நடைமுறைகள் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை சட்டத்தின் மூலம் காப்பது நல்லதுதான். இவற்றை பாதுகாக்க பக்தர்கள் வீதியில் வந்து போராடத் தேவையில்லை. எனவே சபரிமலை விவகாரத்தில் பழைய நடைமுறையே தொடர்வது போல மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். அதற்கு கால தாமதம் ஆகும் பட்சத்தில் மத்திய அரசு அவசர சட்டம் போடவேண்டும் எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக கேரள எம்பி பிரேமச்சந்திரன் மக்களவையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க தடை கோரும் வகையிலானதனிநபர் சட்ட மசோதா தாக்கல் செய்யவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகின.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • 400-க்கும் மேற்பட்ட வசந்த பவன் ஹோட்டல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஊழியர்கள் ரத்ததானம்: “ரத்தம் கொடுப்போம்; நம்பிக்கையை வழங்குவோம்” என்ற செய்தியுடன் சிறப்பு ரத்ததான முகாம்
  • VIJAY ANTONY’S ‘APPA KUTTY’ TO RELEASE WORLDWIDE IN THEATRES ON OCTOBER 16
  • சர்வதேச Netflix திரைப்படமான ‘Best of the Best’-ல் இடம்பெறும் சந்தோஷ் நாராயணனின் ‘Enjoy Enjaami’ மற்றும் ‘Maamadura
  • ‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக தேசிய விருது பெற்றுகொண்ட டி.ஜி. தியாகராஜன், சத்யஜோதி பிலிம்ஸ் பாரம்பரியத்திற்கு கிடைத்த மற்றுமொரு பெருமை!
  • ‘அன்பில் அவன்’ திரைப்படம் இனி 2 அக்டோபர் 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாகும்.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme