Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

சென்னையில் சிக்னல் கிடைக்காத செல்போனை விற்பனை செய்த நிறுவனத்துக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து

Posted on June 3, 2019

சென்னை:
சென்னையில் சிக்னல் கிடைக்காத செல்போனை விற்பனை செய்த நிறுவனத்துக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரம்பூரை சேர்ந்தவர் வடிவேல். கடந்த 2016ம் ஆண்டு ஆன்லைன் மூலம் ரூ.20 ஆயிரத்து 99 கொடுத்து செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த செல்போன் வாங்கிய நாள் முதல் சில கோளாறுகள் ஏற்பட்டு வந்துள்ளது. முக்கியமாக நெட்வர்க் கிடைக்காமல் இருந்துள்ளது. இதனால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் வடிவேல் அவதி அடைந்து வந்துள்ளார். மேலும் தொடுதிரையும் சரியாக வேலை செய்யவில்லை. இதுபற்றி சர்வீஸ் சென்டரில் பலமுறை புகார் அளித்தும் சரி செய்ய முடியவில்லை.

வடிவேல் வக்கீல் என்பதால் தொழில் சம்பந்தமாக யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் அவதியடைந்து வந்துள்ளார். இந்த நிலையில் செல்போன் நிறுவனத்திடம் இருந்து இழப்பீடு கோரி சென்னையில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி லக்‌ஷ்மிகாந்தம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி செல்போன் வாங்கி மனுதாரர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதை உறுதி செய்தார். இதனால் செல்போன் நிறுவனம் மனுதாரர் வடிவேலுக்கு செல்போனின் விலை ரூ.20 ஆயிரத்து 99 மற்றும் இழப்பீடு, மன உளைச்சலுக்கு சேர்த்து ரூ.15 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !
  • SPR India Launches District 12, Redefining Office Ownership for Chennai’s Businesses in an Emerging Commercial Hub
  • லைட் வெயிட் பேபி! ( Light Weight Baby) : விக்கல்ஸ் விக்ரம் – ஆரத்தி கிருஷ்ணா நடிக்கும் படத்தின் 45 நாள் படப்பிடிப்பு நிறைவு : ஆகஸ்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
  • Vikkals Vikram and Arathy Krishna’s Lightweight, Baby! wraps 45-day shoot; first look to be unveiled in August
  • ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme