Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ஜெயலலிதா வாழ்க்கைப் படம் குறித்து இயக்குனர் விஜய்

Posted on June 1, 2019

ஜெயலலிதா வாழ்க்கைப் படம் குறித்து இயக்குனர் விஜய்

விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, நந்திதா நடித்த ‘தேவி-2’ படம் வெளியாகி வெற்றிகரமாக ஒத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இயக்குனர் விஜய், தற்போது ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கும் பணிகள் நடந்து தொடங்கி நடந்து வருகிறது. வருகிற ஜூலையில் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்திருக்கிறோம். இதில் ஜெயலலிதாவாக நடிக்க ஐஸ்வர்யாராய், வித்யாபாலன், கங்கனா ரணாவத் ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் கங்கனா ரணாவத் பொருத்தமாக இருப்பார் என்று அவரை தேர்வு செய்தோம். ஜெயலலிதா தனது 16-வது வயதிலேயே நடிக்க வந்துவிட்டார். எனவே அவரது 16 வயதில் இருந்து கதை ஆரம்பிக்கும். அந்த இளம் வயது ஜெயலலிதா வேடத்துக்காக கங்கனா ரணாவத் தனது உடல் எடையை குறைத்தும், பின்னர் கூட்டியும் நடிக்கிறார். படத்துக்காக அவர் தமிழ் கற்றும் வருகிறார். இந்த படம் முடிய ஒன்றரை வருடம் ஆகும். ஆணாதிக்க சமுதாயத்தில் ஒரு பெண் ஜெயித்து அந்த ஆண்களை எப்படி ஆதிக்கம் செய்தார்⁉என்பதே படத்தின் கருவாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் ‘மாகாளி’ – பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!
  • கட்டா குஸ்தி 2’ வெற்றியை கொண்டாடிய படக்குழு… 50வது நாள் நன்றி அறிவிப்பு விழா!
  • ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!
  • உலகநாயகன் கமல்ஹாசன் உடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு
  • இம்மார்ட்டல் திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme