பிரபலமான பார்பி பொம்மையை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அதேபோல் 70களின் இளவட்டங்களின் பார்பி டாலாக திகழ்ந்தவர் ராஜ்கபூர் இயக்கிய பாபி படத்தில் அறிமுகமான டிம்பிள் கபாடியா. இதில் கச்சை, ஜட்டி அணிந்து டு பீஸில் டிம்பிள் நடித்த காட்சி மிகவும் பிரபலம். கமலின் விக்ரம் படத்திலும் நடித்திருந்தார். டிம்பிளை கமலுக்கு மட்டுமல்ல மகள் ஸ்ருதிக்கும் பிடிக்கும். டிம்பிளுக்கு 60 வயதானாலும் ஸ்ருதியின் பார்பி டால் என்னமோ அவர்தான்.

பாலிவுட்டில் நடித்துக்கொண்டிருந்த டிம்பிள் தற்போது ஹாலிவுட்டில் நடிக்கிறார். இப்படம் உளவு பிரிவு பற்றியதாக ‘டினெட்’ பெயரில் உருவாகிறது. கிறிஸ்டோபர் நோலன் இயக்குகிறார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ஸ்ருதி உடனடியாக டிம்பிளுக்கு வாழ்த்து பகிர்ந்திருக்கிறார்.
‘எனக்கு மிகவும் பிடித்த டிம்பிள் மேம் கிறிஸ்டோபர் நோலன் படத்தில் நடிப்பதை அறிந்து மிக மிக சந்தோஷம் அடைந்தேன். ஐ லவ் யூ டிம்பிள்’ என குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply