ஹரா திரை விமர்சனம்

ஹரா படத்தில் (மோகன் ) ராம் என்ற கதாபாத்திரத்தில் அப்பாவாக மோகன் நடித்திருக்கிறார். இவருடைய மகள் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். திடீரென்று அவருடைய மகள் தற்கொலை செய்து இருக்கிறார். இவருடைய இறப்பிற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. இதை கண்டுபிடிக்க மோகன் தேடுதல் வேளையில் வழியில் குண்டு வெடிப்பில் அனைவரும் இறக்க அங்கு இஸ்லாமியர் ராணுவ வீரர் தன் மகள் திருமணத்திற்கு செல்லும்போது விபத்து ஏற்பட அந்த ராணுவ வீரர் மருத்துவ மனைக்கு செல்லும் பொது
இறப்பதற்கு முன் ராம் இடம் உன் பெயரை இஸ்லாமிய பெயராக மாற்றிக் கொண்டு தன் மகள் திருமணத்தை நடத்தி தருமாறு கேட்க ராம் தனது பெயரை இப்ராகி மகா மாற்றிக்கொள்கிறார் .
இறுதியில் அவர் தன் மகளை கொன்றவர்களை கண்டுபிடித்தாரா மோகன்? இஸ்லாமிய பெயரை ஏன் வைத்தார்? இதற்கெல்லாம் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதி கதை.

கோயம்புத்தூரில் கல்லூரி படித்துக் கொண்டிருந்த தனது மகள் நிமிஷா திடீரென்று தற்கொலை செய்து கொள்கிறார். தனது மகளிம் தற்கொலைக்குப் பின் இருக்கும் உண்மையான காரணங்களைத் தேடிச் செல்கிறார் மோகன். அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் பணத்திற்காக தனியார் போலி மாத்திரை நிறுவனங்களை ஆதரிப்பது, கல்லூரியில் படிக்கும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுப்பட வற்புறுத்துவது இவை எல்லாம் சேர்ந்து தன் மகளின் தற்கொலைக்கு காரணமாவதை தெரிந்துகொண்டு அவர்களைப் பழிவாங்குகிறார் மோகன்.

விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சில்வர் ஜுப்ளி ஸ்டார் மோகன் நடித்துள்ள ஹரா படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அனுமோல், சாரு ஹாசன், வனிதா விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, மனோபாலா, சிங்கம் புலி, தீபா ஷங்கர், சுரேஷ் மேனன் உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ரஷாந்த் அர்வின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.