Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
விஷால் , எஸ் .ஜே சூர்யா நடிக்கும் 'மார்க் ஆண்டனி' படம் பூஜையுடன் தொடங்கியது

விஷாலின் 33வது படமாக உருவாகும் புதிய படமான ‘மார்க் ஆண்டனி

Posted on May 6, 2022

விஷாலின் 33வது படமாக உருவாகும் புதிய படமான ‘மார்க் ஆண்டனி’ படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்குகிறார். விஷாலின் ‘எனிமி’ படத்தைத் தயாரித்த S வினோத்குமார் மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறார் .மிக முக்கிய வேடத்தில் எஸ்ஜே சூர்யா நடிக்கிறார் .

விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கிறார் . மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுனில் வர்மா ,நிழல்கள் ரவி ஆகியோர் நடிக்கிறார்கள்.

‘இசை அசுரன் ‘ ஜி வி பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார் . அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார் .பிரபல சண்டைப்பயிற்சி இயக்குனர்களான கனல் கண்ணன், பீட்டர் ஹெயின் , ரவிவர்மா ஆகியோர் இணைந்து சண்டைப்பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள் . கலை இயக்கம் உமேஷ் ராஜ்குமார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் வெளியாக உள்ளது . இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று சென்னையில் தொடங்கியது .

  • புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய இயக்குநர் இன்னாசி பாண்டியன்
  • இயக்குநர் சுசி கணேசனின் பிறந்தநாள் அன்று நிறைவு பெற்ற ‘ஒரண்ட’ படப்பிடிப்பு
  • பாரதிராஜா அவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு அனுமதி வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும், மாண்புமிகு செய்தி மற்றும் கல்வி அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களுக்கும் நன்றி
  • ‘மொத ராத்திரி’ தேவியாக மனம் கவர்ந்த பானுப்பிரியா – வெற்றிமாறன், மாரி செல்வராஜ், தனுஷ் படங்களில் அடுத்தடுத்து!
  • Banupriya Wins Hearts as Devi in ‘Motha Rathiri’; Joins Exciting Projects with Vetrimaaran, Dhanush & Mari Selvaraj
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme