Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
ஹாஸ்டல் திரைவிமர்சனம்

ஹாஸ்டல் திரைவிமர்சனம்

Posted on April 30, 2022

அசோக் செல்வன், சதீஷ் உள்ளிட்ட நண்பர்கள் நாசர் நடத்தி வரும் ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில், பண பிரச்சனையில் சிக்கும் அசோக் செல்வனுக்கு நாயகி பிரியா பவானி சங்கர் உதவ முன் வருகிறார். இந்த உதவிக்கு பலனாக பாய்ஸ் ஹாஸ்டலுக்கு தன்னை அழைத்து செல்லும்படி கேட்கிறார்.

அசோக் செல்வனும் பணத்திற்கு ஆசைப்பட்டு, பிரியா பவானி சங்கரை யாருக்கும் தெரியாமல் அழைத்து செல்கிறார். ஹாஸ்டலுக்குள் சென்ற பிரியா பவானி சங்கர் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொள்கிறார்
இறுதியில் பாய்ஸ் ஹாஸ்டலில் இருந்து பிரியா பவானி சங்கர் வெளியேறினாரா? பிரியா பவானி சங்கர் ஹாஸ்டலுக்குள் செல்ல காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அசோக் செல்வன், எப்பவும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருவார். ஆனால், இம்முறை அவரது தேர்வு தவறாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். அவரது நடிப்பில் பெரிய மாற்றம் இல்லை. நாயகியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர், கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். சதீஷ், நாசர், முனிஷ்காந்த் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு உதவியிருக்கிறது.

  • ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்கமல்ஹாசன்பெருமையுடன் வழங்கும்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும்”தர்மன்”இயக்கம்: அஸ்வத் மாரிமுத்து
  • சிங் கீதம் திரை விமர்சனம்
  • அந்தரன் திரை விமர்சனம்
  • அனந்தன் காடு திரை விமர்சனம்
  • *கோபம், வஞ்சம், வெற்றி – மனதின் போராட்டத்தை சொல்லும் “வஞ்சம் தீர்” பாடல்!*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme