Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
கடைசி விவசாயி’ பிப்ரவரி 11 ஆம் தேதி ரிலீஸ்

‘கடைசி விவசாயி’ பிப்ரவரி 11 ஆம் தேதி ரிலீஸ்! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted on January 31, 2022

கடைசி விவசாயி நல்லாண்டி என்ற முதியவர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வித்தியாசமான கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகிபாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படம் விவசாயம் மற்றும் விவசாயிகளை மையப்படுத்தி உருவாகியுள்ளது.

ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் படங்களில் ஒன்றான இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாரான நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் படத்தின் வெளியீட்டு தள்ளிப்போனது. தற்போது ஓரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்துப்பட்டு வருவதால் பல திரைப்படங்கள் வெளியாக தயாராகி வரும் நிலையில், ‘கடைசி விவசாயி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி, ‘கடைசி விவசாயி’ திரைப்படம் வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த தகவலை நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட ‘கடைசி விவசாயி’ படக்குழுவினர் தங்களது சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிட்டு கொண்டாடி வருகிறார்கள்.

  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme