Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
நடிகை நயன்தாரா அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் கால்பதித்துள்ளார்

நடிகை நயன்தாரா அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் கால்பதித்துள்ளார்

Posted on December 12, 2021

தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, முதன் முறையாக தனித்துவமான அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் கால்பதித்துள்ளார். உலகின் மிகப்பெரிய லிப் பாம் கலெக்ஷன் கம்பெனியான – தி லிப் பாம் கம்பெனிTM எனும் நிறுவனத்துடன் இணைந்து தனது புதிய பயணத்தை துவக்கியுள்ளார்.

நடிகை நயன்தாரா அவர்கள் முன்னணி தோல் மருத்துவர் டாக்டர் ரெனிட்டா ராஜன் உடன் இணைந்து, காஸ்மெடிக்ஸ் வர்த்தக உலகில், ஒரு புதிய பிராண்டை அறிமுகம் செய்தவதன் மூலம், ஒரு புதிய அத்தியாயத்தை துவங்கியுள்ளார். லிப் பாம்கள் மட்டுமே வழங்கவுள்ள இந்நிறுவனம், 100க்கணக்கான வகைகளில் அதனை வழங்கி சிறப்பிக்கவுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய லிப் பாம் அணிவகுப்பை வழங்கும் நிறுவனமாக இந்நிறுவனம் செயல்படவுள்ளது. நடிகை நயன்தாரா தான் பயன்படுத்தும் சொந்த சரும பராமரிப்பு பொருட்களில், மிகச்சிறப்பான செயல்திறன், உயர் பாதுகாப்பு அம்சங்களையே மிக முக்கிய அம்சமாக கருதுவேனென்றும், அந்த இரு

அம்சங்களும் இந்த தி லிப் பாம் கம்பெனிTM பொருட்களில் கண்டிப்பாக இடம்பெறும் என்றும் கூறியுள்ளார்,

the” lipbalm company

ஒரு சிறப்பான உயர்தர அழகு சாதன பொருளை தேடுபவருக்கு, சிறப்பான படைப்பை வழங்குவதில் பெருமை கொள்கிறோம் என்கிறார் நயன்தாரா. உதடு தைலம் பயன்படுத்துவது ஆரோக்கியமான பழக்கமாகும், மேலும் எங்களது உதடு தைலம் ஒரு இனிமையான உணர்வை தந்து, இதனை அத்தியாவசிய தினசரி பழக்கமாக மாற்றும் என்கிறார் டாக்டர் ரெனிட்டா ராஜன். இறுதியாக இருவரும் தி லிப் பாம் கம்பெனிTM மூலம் சிறப்பான பொருட்களை வழங்குவதில் பெருமை கொள்கிறோம். இப்பொருட்கள் உங்களுக்கு சிறப்பான சரும பொலிவை தரும் என்றனர்.

  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme