Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில்

Posted on May 21, 2019

புதுடெல்லி.

சீனா, கஜகஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் இந்த ஆண்டு கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கெக் நகரில் நடைபெறுகிறது.

2 நாள் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் செவ்வாய்க்கிழமை (மே 21) பங்கேற்கிறார். இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்த ஆண்டுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாடு மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பிஷ்கேக்கில் நடைபெறுகிறது. அதில் இந்தியா சார்பில் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பங்கேற்கவுள்ளார். அந்த மாநாட்டில், பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் உள்ள பிரச்னைகள் குறித்து அவர் விவாதிக்க உள்ளார். அது தவிர ஜூன் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா சார்பில் முன்னெடுக்க வேண்டிய பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்யவுள்ளார்.

இந்த மாநாட்டின் இடையே, கிர்கிஸ்தான் அதிபர் சூரன்போய் ஜீன்பெகோவை சந்தித்து இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • 400-க்கும் மேற்பட்ட வசந்த பவன் ஹோட்டல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஊழியர்கள் ரத்ததானம்: “ரத்தம் கொடுப்போம்; நம்பிக்கையை வழங்குவோம்” என்ற செய்தியுடன் சிறப்பு ரத்ததான முகாம்
  • VIJAY ANTONY’S ‘APPA KUTTY’ TO RELEASE WORLDWIDE IN THEATRES ON OCTOBER 16
  • சர்வதேச Netflix திரைப்படமான ‘Best of the Best’-ல் இடம்பெறும் சந்தோஷ் நாராயணனின் ‘Enjoy Enjaami’ மற்றும் ‘Maamadura
  • ‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக தேசிய விருது பெற்றுகொண்ட டி.ஜி. தியாகராஜன், சத்யஜோதி பிலிம்ஸ் பாரம்பரியத்திற்கு கிடைத்த மற்றுமொரு பெருமை!
  • ‘அன்பில் அவன்’ திரைப்படம் இனி 2 அக்டோபர் 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாகும்.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme