Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
ஆர்.கே நகர் திரைப்படம் என்னை உத்வேகப்படுத்தியது - நடிகர் இனிகோ பிரபாகர்

ஆர்.கே நகர் திரைப்படம் என்னை உத்வேகப்படுத்தியது – நடிகர் இனிகோ பிரபாகர்

Posted on July 7, 2020

ஆர்.கே நகர் திரைப்படம் என்னை உத்வேகப்படுத்தியது – நடிகர் இனிகோ பிரபாகர்

ஆரம்ப காலத்தில் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பின் தனது தனித்துவமான நடிப்பு திறமையால் பல படங்களில் முதன்மை மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பலரது பாராட்டை பெற்றவர் நடிகர் இனிகோ பிரபாகர்.

சென்னை 28, சென்னை 28 II, பூ, சுந்தரபாண்டியன், ஆர்.கே நகர் என இவர் நடித்த அனைத்து படங்களிலும் இவரது நடிப்பும், கதாபாத்திரத்தின் தன்மையை கையாண்ட விதமும் பலரையும் கவர்ந்தது. அழகர் சாமியின் குதிரை, ரம்மி, பிச்சுவாகத்தி, வீரய்யன் படங்களில் நாயகனாக நடித்திருந்தார்.

நடிகர் இனிகோ பிரபாகர் கூறுகையில், “நான் என்றும் என் கதாபாத்திரத்தின் தன்மை மாறாமல் நடிப்பது ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. அதிலும் ஆர்.கே நகர் படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும் அந்த படத்தில் கதாநாயகனுக்கு நிகரான கதாபாத்திரம் என்பதால் எனது நடிப்பு எதார்த்தமாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் சரவண ராஜன் விரும்பினார், நானும் அதையே செய்தேன். இயக்குனர் வெங்கட்பிரபு ஆர்.கே நகர் படத்தில் என நடிப்பை பலரும் பாராட்டியதாக கூறியது என்னை மேலும் உத்வேகப்படுத்தியது.

தற்போது இரண்டு புதிய படங்களில் கதாநாயகனாக நடிக்கின்றேன். இந்த இரண்டு படங்களின் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

‘ஆர்.கே நகர் படத்தில் கிடைத்தது போன்ற சவாலான வில்லன் கதாபாத்திரம் கிடைத்தால் மீண்டும் நடிப்பீர்களா?’ என எனது ரசிகர்கள் பலர் என சமூக வலைதளத்தில் கேட்டிருந்தனர். அதற்கு ‘கண்டிப்பாக செய்வேன்’ என்று பதலளித்திருந்தேன். அவர்கள் கூறியது போன்றே அப்படிப்பட்ட சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.ஆர்.கே நகர் திரைப்படம் என்னை உத்வேகப்படுத்தியது - நடிகர் இனிகோ பிரபாகர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Students deserve Justice,accountability and a Level playing field in NEET… says Deepshika
  • “நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா
  • சூர்யா – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்”  படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்” (The Wedding Song ) வெளியானது!
  • நீட்டினை எதிர்த்தும் இந்திய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தனது பதவியினை ராஜினாமா செய்யக் கோரியும் 22.07.2026 அன்று நடந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈவு இரக்கமற்று தடியடி நடத்திய இந்திய ஒன்றிய பாரதிய ஜனதா அதிகார வர்க்கத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme