Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
Director Arumugakumar-indiastarsnow.com

தமிழ்ப் படத்தயாரிப்பாளருக்குக் கிடைத்த கெளரவம்!

Posted on July 3, 2020

தமிழ்ப் படத்தயாரிப்பாளருக்குக் கிடைத்த கெளரவம்!

விஜய் சேதுபதி கெளதம் கார்த்திக் இணைந்து நடித்த ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆறுமுக குமார். ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம்’ படத்தையும் தற்போது இவர் தயாரித்து வருகிறார். மலேஷியாவின் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும், தமிழ்ப்பட உள்ளடக்கம் மற்றும் இந்திய வணிகப் பிரிவின் நிர்வாகக் குழு உறுப்பினராக தற்போது இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்

இச் செய்தியை மிகுந்த உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்ட இயக்குநர் ஆறுமுக குமார், “மலேஷியாவின் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் Tamil Film Content & India Market by National Film Development Corporation Malaysia (FINAS) எனக்கு அளித்த இந்த கெளரவம் நான் சற்றும் எதிர்பாராதது. இது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது. ஓர் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் தமிழ்ப்பட உலகம் எனக்கு பயனுள்ள பல அரிதான அனுபவங்களைக் கொடுத்திருக்கிறது. தமிழ்த் திரைப்பட உள்ளடக்கம் மற்றும் வணிகப் பிரிவின் Tamil Film Content & India Market by National Film Development Corporation Malaysia (FINAS) நிர்வாகக் குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டதை எனக்குக் கிடைத்த பெரிய வரமாகவே கருதுகிறேன். இந்த வாய்ப்பின் மூலம் நமது வணிக எல்லைகளை மேலும் உயர்த்தவும், இந்திய மலேஷிய பொழுது போக்கு வணிக மதிப்புகளை உயர்த்தவும் பாலமாக இருப்பேன்” என்றார் ஆறுமுக குமார்.Director Arumugakumar-indiastarsnow.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Students deserve Justice,accountability and a Level playing field in NEET… says Deepshika
  • “நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா
  • சூர்யா – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்”  படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்” (The Wedding Song ) வெளியானது!
  • நீட்டினை எதிர்த்தும் இந்திய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தனது பதவியினை ராஜினாமா செய்யக் கோரியும் 22.07.2026 அன்று நடந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈவு இரக்கமற்று தடியடி நடத்திய இந்திய ஒன்றிய பாரதிய ஜனதா அதிகார வர்க்கத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme