Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
Taapsee-Pannu-indiastarsnow.com

டாப்சிக்கு ஷாக் கொடுத்த கரண்ட் பில்

Posted on June 30, 2020

Taapsee-Pannu-indiastarsnow.com
கொரோனா ஊரடங்கில் மின் கட்டணத்தை அநியாயத்துக்கு உயர்த்தி விட்டதாக திரையுலகை சேர்ந்தவர்கள் குறை கூறி வருகிறார்கள். ஏற்கனவே நடிகர் பிரசன்னா தனது வீட்டுக்கு அதிக மின்கட்டணம் வந்துள்ளதாக புகார் கூறினார். அதனை மின்சார வாரியம் மறுத்து விளக்கமும் அளித்தது. தொடர்ந்து நடிகை கார்த்திகா மும்பை மின்வாரியம் தனது வீட்டுக்கு ரூ.1 லட்சம் மின்கட்டணம் விதித்துள்ளதாக குறைகூறினார். இது பரபரப்பானது.

இந்த நிலையில் நடிகை டாப்சியும் தனக்கு அதிக மின்கட்டணம் விதித்துள்ளதாக கோபத்தில் இருக்கிறார். இவர் தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி வந்தான் வென்றான், காஞ்சனா 3, வைராஜா வை, கேம் ஓவர் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் பிரபல நடிகையாக இருக்கிறார்.

அவர் கூறும்போது, “எனது வீட்டுக்கு ரூ.36 ஆயிரம் மின் கட்டணம் விதித்துள்ளனர். ஊரடங்கு அமலில் இருக்கும் 3 மாதங்களாக நான் புதிதாக மின்சாதனங்களை வாங்கவோ பயன்படுத்தவோ இல்லை. அப்படி இருக்கும்போது இவ்வளவு மின் கட்டணம் எப்படி கணக்கிட்டனர் என்பது புரியவில்லை” என்று கூறியுள்ளார்..
Taapsee-Pannu-indiastarsnow.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • தஞ்சையின் தனயன் (சன் ஆஃப் தஞ்சை) என்பது பண்டைய தென்னிந்தியாவின் சோழப் பேரரசில் அமைந்த ஒரு திறந்தவெளி அதிரடி சாகச விளையாட்டாகும்
  • *இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு நடிகர் உதயா கண்ணீர் அஞ்சலி?
  • முதல் மரியாதைக்குஇறுதி மரியாதை – கவிப்பேரரசு வைரமுத்து பிதாமகனே போய் விட்டாயா???
  • ஆழ்ந்த இரங்கல்களை அனைவருக்கும் தெரிவிக்கிறேன்.- சீனு ராமசாமி.
  • தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA) இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவு – இரங்கல் அறிக்கை
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme