Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
ஹிந்தி ரீமேக்கில் கைதி படம் இந்த பாலிவுட் நடிகரா நடிக்கிறார்

ஹிந்தி ரீமேக்கில் கைதி படம் இந்த பாலிவுட் நடிகரா நடிக்கிறார்

Posted on February 7, 2020

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்க, கார்த்தி நடித்த கைதி படம், கடந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு ரிலீசானது. ஆக்‌ஷன், அப்பா – மகள் சென்டிமென்ட் கதையுடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது. இதேபோல் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியான இப்படம் அங்கும் நல்ல வசூல் பார்த்தது.
இந்நிலையில், டிரீம் வாரியர் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, இந்தியில் கைதி படத்தை தயாரிக்கிறது. இதில், சல்மான்கான் நடிக்க இருப்பதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இது குறித்து எஸ்.ஆர்.பிரபு கூறுகையில், ”இந்தி பதிப்பிலும், பெரிய ஹீரோ நடிப்பார் என்பது உண்மையே. ஆனால், எவரையும் இறுதி செய்யவில்லை,” என்றார். ஹிந்தி ரீமேக்கில் கைதி படம் இந்த பாலிவுட் நடிகரா நடிக்கிறார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
  • தமிழ்நாடு நீட் தேர்வை எதிர்த்து டெல்லியுடன் போராடும் நிலையில், மகுடஞ்சாவடியில் உள்ள இலவச பயிற்சி மையம் நீட் தேர்வில் சாதனை!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme