Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

டப்பிங் சங்கத் தலைவராக ராதாரவி போட்டியின்றித் தேர்வு

Posted on February 6, 2020

திரைத்துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக, திரைப்படப் பின்னணிப் பாடகி சின்மயி, சமூக ஊடகங்களில் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, சங்க விதிகளை மீறி சின்மயி செயல்பட்டதாக டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து கடந்த வருடம் 2018ல் அவர் நீக்கப்பட்டார். மேலும், 2018ம் ஆண்டுக்கான சங்கத்தின் உறுப்பினர் பட்டியலில் அவரது பெயர் உள்ளது என ஆதாரங்களுடன் சின்மயி வாதிட்டார். இதையடுத்து, பாடகி சின்மயியை, டப்பிங் கலைஞர் சங்கத்தில் இருந்து நீக்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு, சென்னை 2வது உதவி உரிமையியல் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

இந்நிலையில், 2020, 2022ம் ஆண்டுக்கான டப்பிங் யூனியன் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான, தேர்தல் வருகின்ற பிப்ரவரி 15ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் மீண்டும் தலைவர் பதவிக்கு ராதாரவி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாடகி சின்மயி போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர், டப்பிங் சங்கத்தில் உறுப்பினராக இல்லாததால் பாடகி சின்மயி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சின்மயி வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் டப்பிங் சங்கத் தலைவராக ராதாரவி போட்டியின்றித் தேர்வு செய்யப்படுகிறார். இதனால், பாடகி சின்மயி, தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், இந்த விவகாரத்தைச் சட்டரீதியாக அணுகவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு ஜி.கே.எம். தமிழ்க்குமரன் தலைமையில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணி அவர்களின் முன்னிலையில்
  • Bhagwan Mahaveer Foundation Invites Nominations from Tamil Nadu for the 30th National Mahaveer Awards
  • *Vision Cinema House’s ‘Haiku’ Takes the Next Step; Aegan Commences Dubbing*
  • *விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய நடிகர் ஏகன்!*
  • ” திருக்குறள் 2 ” தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme