Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
kaalidas_Film Review-Indiastarsnow.com

காளிதாஸ் திரை விமர்சனம்

Posted on December 14, 2019

அறிய இரவு பகல் பாராது சின்சியராக வேலை பார்க்கும் பரத், குடும்பத்தை சரிவர கவனிக்காமல் விடுகிறார். இதனால் அவருக்கு அவரது மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இறுதியில் பரத், பெண்கள் இறப்பிற்கான காரணத்தை கண்டுபிடித்தாரா? பரத்தின் திருமண வாழ்க்கை என்ன ஆனது? என்பது தான் இப்படத்தின் மீதிக்கதை.
kaalidas_Film Review-Indiastarsnow.com
நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல் இருந்த பரத், காளிதாஸ் படத்தில் தனது அசத்தலான நடிப்பின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். நேர்மையான போலீஸ் அதிகாரி வேடத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். அழகு, பதுமையுடன் இருக்கும் நாயகி அன் ஷீத்தல் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.
kaalidas_Film Review-Indiastarsnow.com
அசிஸ்டண்ட் கமிஷனராக வரும் சுரேஷ் மேனன் தனது யதார்த்தமான நடிப்பால் கவனிக்க வைக்கிறார். ஆதவ் கண்ணதாசன் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். விறுவிறுப்பான கதைகளத்தில் போலீஸ் ஏட்டு கதாபாத்திரத்தின் மூலம் ஆங்காங்கே வரும் டைமிங் காமெடிகள் சிரிக்க வைக்கிறது.
அறிமுக இயக்குனரான ஸ்ரீ செந்தில், முதல் படத்திலேயே அசர வைக்கிறார். எந்த விதத்திலும் படம் பார்ப்பவர்களை யூகிக்க விடாமல் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர், கிளைமாக்ஸில் எதிர்பாரத டுவிஸ்ட் வைத்து அசத்தியிருக்கிறார்.

விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் மனதில் பதியாவிட்டாலும், பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். சுரேஷ் பாலாவின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம்.kaalidas_Film Review-Indiastarsnow.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme