Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
குழந்தைகளின் ஒவ்வொரு வயதிலும் ஏற்படும் முதிர்ச்சி படிகள் (பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டியது

குழந்தைகளின் ஒவ்வொரு வயதிலும் ஏற்படும் முதிர்ச்சி படிகள் (பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டியது

Posted on October 28, 2019

குழந்தைகளின் ஒவ்வொரு வயதிலும் ஏற்படும் முதிர்ச்சி படிகள் (பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டியது)
……………………………………………..

@ ஒரு குழந்தை, எப்போது நடக்கும் , தவழும் , பேசும் , போன்ற எதிர்பார்ப்பு குழந்தை பிறக்கும் போதே பெற்றோருக்கும் பிறது விடும்.

உண்மையில் ஒரு குழந்தையின் வளர்ச்சியானது ஒரு படிமுறையாக கட்டமைக்கப் பட்டதாகும். குறிப்பிட்ட காலத்தில்தான் ( வயதில்) குறிப்பிட்ட செய்முறைகளை செய்வதற்குரிய ஆற்றல் அந்தக் குழந்தைக்கு உருவாகும்.

இவ்வாறு ஒவ்வொரு வயதிலும் ஒரு குழந்தை அடைய வேண்டிய ஆற்றல் அந்த வயதிற்குரிய வளர்ச்சி எல்லை (mile stone ) எனப்படுகிறது.

அதாவது ஒரு எட்டு மாதக் குழந்தையின் வளர்ச்சி எல்லையானது (mile stone) தவழத் தொடங்குதல் ஆகும்.

இவ்வாறு மனிதனின் வளர்ச்சி எல்லை நான்கு முக்கிய பிரிவுகளில் நடைபெறுகிறது.

1)அசைவு சம்பந்தமான வளர்ச்சி (தவழுதல், நடத்தல், ஓடுதல்)(GROSS MOTOR)

2)சமூகத்தோடு ஐக்கியமாகும் வளர்ச்சி( சிரித்தல், கையசைத்தல், )(SOCIAL)

3)நுணுக்கவேலைகள் மற்றும் பார்வை(FINE MOTOR)

4)பேச்சு மற்றும் செவிப்புல வளர்ச்சி(SPEECH AND HEARING )

இந்த இடுகையில் முதலாவது பிரிவில் ஏற்படுகின்ற வளர்ச்சிப் படிமுறைகளை பார்ப்போம்.

# 4ஆம் மாதம் _தலைய நேராக வைத்திருத்தல் (head control )

# 3_6 ஆம் மாதம் _குழந்தை உடம்பை சுழற்றுதல்(குப்புறப் படுத்தல்)

# 5ஆம் மாதம் _துணையாக நாம் பிடித்துக் கொள்ளும்போது இருத்தல் –

# 6ஆம் மாதம்_எந்தத் துணையும் இல்லாமல் இருத்தல் .

# 8ஆம் மாதம்_ தவழுதல்.

# 9ஆம் மாதம்_எழுந்து நிற்றல்.

# 10ஆம் மாதம்_பிடித்துக் கொண்டு நடத்தல்.

# 12ஆம் மாதம்_துணையின்றி நடத்தல்.

# 15ஆம் மாதம்(1வயது 3மாதம்)_ ஓடுதல்.

# 2 வயது _ஒரு பந்தை உதைத்தல்.

# 3 வயது _மூன்று சக்கரங்களைக் கொண்ட வண்டியை மிதித்தல்.

குறிப்பாக மூன்று மாதம் வயதுடைய குழந்தை செய்ய வேண்டியவை..
……………………………………….
அசைவு சம்பந்தமான செயற்பாடுகள்
*தலையை நிமிர்த்தி வைத்திருக்கும் திறன் .
*குப்புறப் படுத்திருக்கும் போது தலை மற்றும் நெஞ்சினை உயர்த்துதல
*அசையும் பொருள் அல்லது நபர்களை தொடர்ச்சியாக பார்த்தல்

உணர்ச்சி மற்றும் சிந்தனை சம்பந்தமானவை.
*ஒலி வரும் திசையை நோக்கி தலையைத் திருப்புதல்
*நீங்கள் ஒலி எழுப்பி விளையாட்டுக் காட்டுவதை உணர்ந்து ரசித்தல்
*நீங்கள் சிரிக்கும் போது பதிலுக்குச் சிரித்தல்

ஆறு மாதக் குழந்தையின் திறன்கள்
………………………………………
அசைவு சம்பந்தமானவை
*இருத்தி வைக்கும் போது தலையை நேராக வைத்திருத்தல்
*தூரத்தில் இருக்கும் விளையாட்டுப் பொருட்களை எட்டிப் பிடித்தல்
*சூப்பிப் போத்தலைப் பிடித்து பால் குடிக்க முயற்சித்தல்
*விளையாட்டுப் பொருட்களை ஒரு கையில் இருந்து இன்னொரு கைக்கு மாற்றுதல்
*தானாக எழுந்து இருத்தல் *உடம்பை உருட்டிக் கொண்டே அசைதல்

உணர்ச்சி மற்றும் எண்ணம் சம்பந்தமானவை
*சாப்படைக் கொடு போகும் போது வாயைத் திறத்தல்
*மற்றவர்கள் செய்யும் சிறிய செயல்களை திருப்பிச் செய்ய முயற்சித்தல்
*பேச்சு
*நெருக்கமானவர்களின் முகங்களை அறிந்து கொள்ளுதல்
*தொந்ததரவுக்கு உள்ளாகும் போது அழுதல்
*கண்ணாடியில் தன் முகத்தையே பார்த்து சிரித்தல்

ஒரு வயதுடைய குழந்தையின் திறன்கள்
………………………………………..
அசைவு சம்பந்தப்பட்டது
*சூப்பியில் இருந்து கோப்பையினால் குடிக்கப் பழகுதல்
*சிறிய உணவுத்துண்டுகளை தானாகவே எடுத்து வாயில் வைத்துச் சாப்பிடுதல்
*துணையின்றி சில அடிகள் நடத்தல்

உணர்ச்சி சம்பந்த பட்டவை
மற்றவர்கள் செய்யும் *செயற்பாடுகளை தானும் செய்ய முயற்சித்தல்
*இசையை கேட்டு சிறிய உடல் அசைவுகளைக் காண்பித்தல்
*தூரத்தில் உள்ள விளையாட்டுப் பொருட்களை தேடித் போய் விளையாட முயற்சித்தல்
*பேச்சு
அம்மா அப்பா தவிர்ந்த வேறு ஒரு வார்த்தையை பேசத் தொடங்குதல்
வீட்டில் உள்ள மற்றவர்களின் பெயர்களை அறிந்து கொள்ளுதல்
மற்றவர்களோடு பேச முயற்சித்தல்
*வீட்டில் உள்ளவர்களோடு நெருக்கமாகப் பழகி வெளியாட்களோடு அன்னியத்தைக் காண்பித்தல்
*பெரியவர்கள் சொல்லும் சிறிய சிறிய கட்டளைகளை உணர்ந்து கொள்ளுதல்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • “‘ஹைக்கூ’ ரசிகர்களின் மனதைத் தொடும் ஃபீல் குட் என்டர்டெயினர் திரைப்படம்”- இயக்குநர் யுவராஜ் சின்னசாமி!
  • பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நடிகை அனுமோல்
  • அக்டோபர் 30 முதல் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் ‘செய் செய்யாதே’
  • யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!
  • Two Powerful Women. One Unforgiving Rivalry. A Legacy at Stake:
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme