Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
ஜோர்டான் நாட்டில் மகளிர் கால்பந்து போட்டியின் நடந்த ஒரு உணர்வுபூர்வமான சம்பவம்

ஜோர்டான் நாட்டில் மகளிர் கால்பந்து போட்டியின் நடந்த ஒரு உணர்வுபூர்வமான சம்பவம்

Posted on October 28, 2019

ஜோர்டான் நாட்டில் மகளிர் கால்பந்து போட்டியின் நடந்த ஒரு உணர்வுபூர்வமான சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், இரு அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி நடைபெறுகிறது. அப்போது, தலையில் புர்கா அணிந்த பெண் தனது எதிரணியினரிடமிருந்து கால்பந்தை பறிக்க முயலும்போது, அவரது புர்கா சிறிது அவிழ்ந்து விட்டது. தலைமுடியை வேறு ஆண்கள் பார்க்காவண்ணம் இருக்க இவ்வாறு அணிவது அவர்கள் மரபு. எனவே அது அவிழ்ந்ததும் அந்த பெண் அப்படியே அந்த இடத்தில் அதை சரி செய்ய முயலுகிறார்.

உடனே எதிரணியிலிருக்கும் பெண்கள் ஆட்டத்தை அப்படியே நிறுத்திவிட்டு, அவரை சுற்றி ஒரு கேடயம் போல நின்று கொள்கிறார்கள். அவர் புர்காவை சரி செய்து முடித்ததும் மீண்டும் ஆட்டம் துவங்குகிறது.

இந்த ஒரு சிறு சம்பவம் ஒருவரின் நம்பிக்கை மற்றும் அவர்களின் பழக்கவழக்கங்கள் மீது மற்றவர்களுக்கு இருக்க வேண்டிய மரியாதைக்கும் நம்பிக்கைக்கும் எடுத்துக்காட்டாக இருக்கிறது. உதவிய அணியினர் அந்த போட்டியில் வெற்றி பெற்றாலும், இந்த செயலுக்காகவே அனைவரது மனதிலும் இடம்பெற்றுவிட்டனர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • *Vision Cinema House’s ‘Haiku’ Takes the Next Step; Aegan Commences Dubbing*
  • *விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய நடிகர் ஏகன்!*
  • ” திருக்குறள் 2 ” தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது
  • திரைப்பட இயக்குநர் திரு. கரு. பழனியப்பன் அவர்கள், சென்னை – ஆழ்வார்பேட்டையில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் இல்லத்தில் அவரைச் சந்தித்தார்
  • ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme