Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
PM-Modi-holds-series-of-bilateral-meetings-on-sidelines-of_indiastarsnow.com

நியூயார்க் நகரில் நாடாகும் ஐநா கூட்டத்துக்கு இடையே பல்வேறு நாட்டு தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்

Posted on September 24, 2019

ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். 7 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, ஐநா கூட்டத்துக்கு இடையே பல்வேறு நாடுகளுடன் தலைவர்களை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். ஜெர்மனி அதிபர் ஏஞ்சலோ மார்கல், இத்தாலி ஜனாதிபதி கியுசேப் கோண்ட், மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகம்மது சோலி, பூடான் பிரதமர் லோதே ஷெரிங், நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே ஆகிய தலைவர்களையும் சந்தித்து பேசினார்.
கத்தார் மன்னர் தமீம் பின் ஹமாத்தை சந்தித்து பிரதமர் மோடி பேசினார். அப்போது, இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. யோகாவை சர்வதேச அளவில் பிரபலமாக்க மோடி எடுத்த முயற்சிகளையும் தமீம் பின் ஹமாத் பாராட்டினார். மாலத்தீவு அதிபருடனான சந்திப்பின் போது, வளர்ச்சி ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் பருவநிலை மாற்ற ஒத்துழைப்பு ஆகிய விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

அதேபோல், யுனிசெப் அமைப்பின் செயல் இயக்குநர் ஹென்ரீயட்டா போரே வையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்ப்பின் போது, இந்தியாவில் குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் ஆகியவற்றுக்காக அரசு எடுத்த நடவடிக்கைகளையும் மோடி சுட்டிக்காட்டினார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme