நூறு கோடி வானவில்’ என்பது 2026 நவம்பர் 6 அன்று ZEE5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான ஒரு தமிழ்க் காதல் திரைப்படமாகும். படத்தில் இயக்குனர் சசி இதற்கு முன் ‘பிச்சைக்காரன்’ போன்ற படங்களை இயக்கிய தமிழ் திரை உலகில் மக்களால் கொண்டாடப்பட்ட இயக்குனர் நூறு கோடி வானவில் இயக்கியுள்ளார்.

நடிகர்கள்:
ஹரிஷ் கல்யாண், சித்தி இத்னானி, ரினில், கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த் ஆகியோர் இனத்தொடரில் நடித்துள்ளனர்.

மும்பையில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரியும் வினோத் (ஹரிஷ் கல்யாண்), வேலை விஷயமாக கோவா கிளைக்கு மாற்றலாகி வருகிறார். அங்கு, எதிர்பாராத விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் சென்ற தன் காதலர் ரிச்சியை (ரினில்) எப்படியாவது மீட்கப் போராடிக் கொண்டிருக்கும் ஃபென்னியை (சித்தி இத்னானி) சந்திக்கிறார்.
ஃபென்னியின் நிலையை அறிந்து, அவளுடைய காதல் கதையை மையமாக வைத்து ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தத் திட்டமிடுகிறார் வினோத். தொடக்கத்தில் மோதலில் தொடங்கி பின்னர் நட்பாகும் இவர்களின் பயணத்தில், வினோத் ஃபென்னியை காதலிக்கத் தொடங்குகிறார். அதன் பின் இவர்களது முக்கோணக் காதல் கதையில் என்ன நடக்கிறது, ஃபென்னியின் காதலர் கோமாவில் இருந்து மீண்டாரா என்பதை உணர்வுபூர்வமாகப் ZEE5 ஓடிடி தளத்தில் திரையில் காண்பவரை ரசிக்க வைக்கிறது இந்த நூறு கோடி வானவில் திரை கதை.