ஜித்து மாதவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சீன்’ திரைப்படம், தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் 6ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தில் நஸ்ரியா நஜீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு, சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், விறுவிறுப்பான பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்த மாஸ் என்டர்டெய்னராக இப்படம் உருவாகியுள்ளது.
ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். ஜெயஸ்ரீ தாமோதரன் மற்றும் ராஜசேகர் பாண்டியன் இணை தயாரிப்பாளர்களாகப் பணியாற்றியுள்ளனர்.
இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் நடிகர் சிவகுமார் மற்றும் நடிகர் கார்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

விழாவில் நடிகர் சூர்யா பேசுகையில்:
“இது ரொம்ப முக்கியமான மேடை. ‘சீன்: படத்தின் இசை வெளியீட்டு விழா. இந்த நேரத்தில் என்னுடைய முதல் படமான ‘நேருக்கு நேர்’ படத்திற்கு தேவா சார் இசையமைத்திருந்தார். அவருக்கு இந்த மேடையில் என்னுடைய பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கிறேன். அவர் எப்போதும் எங்களுடைய நினைவில் இருப்பார். அவர் போட்ட ‘அவள் வருவாளா..!’ என்ற ட்யூன் தான் இன்று வரை என்னை அடையாளப்படுத்தி வருகிறது . நான் இவ்வளவு தூரம் பயணித்ததற்கு தேவா சார் தான் ஆரம்பப் புள்ளி.
இந்த மேடையை மீண்டும் அழகாக்கியது தமிழகத்தின் வெவ்வேறு ஊர்களில் இருந்து இங்கு வருகை தந்த ரசிகர்களாகிய நீங்கள் தான். உங்களின் அன்பு தான். திரை உலகில் அறிமுகமாகி 28 வருடங்கள் ஆகிவிட்டது. கொஞ்சம் கூட அன்பு குறையாமல் என் மீது பாசம் காட்டி வருகிறீர்கள். மேடையில் நிற்க வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நற்பணி மன்றம் என்றால் எப்படி இருக்க வேண்டும்? நாம் யார்? நாம் எப்படி இருக்க வேண்டும்? என்பதை மற்றவர்களுக்காக நாம் ஃப்ரூப் செய்ய வேண்டியதில்லை. ‘மற்றவர்கள் என்ன பேசினாலும் அதை எதிர்த்து பேச வேண்டாம்’ என்று நான் சொன்ன ஒரு வார்த்தைக்கு கட்டுப்பட்டு, எப்போதும் அந்த பேரன்பை கடைப்பிடித்து வருகிறீர்கள்.