Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப்ஸ் அடிக்க, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணைந்துள்ள பிரம்மாண்டமான புதிய திரைப்படம் பூஜையுடன தொடங்கியது

Posted on November 1, 2026

*மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப்ஸ் அடிக்க, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணைந்துள்ள பிரம்மாண்டமான புதிய திரைப்படம் பூஜையுடன தொடங்கியது!*மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் மாஸ்டர் ஸ்டோரி டெல்லர் சுகுமார் மீண்டும் இணையும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் #RC17 # RC2Sukku திரைப்படம் இன்று தொடங்கியது. மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் மற்றும் டி-சீரிஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படத்தின் பூஜை ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் திரையுலகைச் சேர்ந்த பல முக்கியப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.இந்த விழாவில் மெகாஸ்டார் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கிளாப்ஸ் அடித்தார். மேலும், தில் ராஜுவுடன் இணைந்து படத்தின் திரைக்கதையைப் படக்குழுவினரிடம் வழங்கினார். டி-சீரிஸ் நிறுவனத்தின் பூஷன் குமார் கேமராவை இயக்கி படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். விழாவில் பங்கேற்ற இயக்குநர்கள் முதல் காட்சியை இயக்கினர்.ராம் சரண், சுகுமார் கூட்டணியில் இதற்கு முன்பு வெளியான ‘ரங்கஸ்தலம்’ திரைப்படம் தெலுங்கில் பெரும் வெற்றி பெற்றது. தற்போது மீண்டும் இருவரும் இணைந்துள்ளதால், இந்த புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. நடிகர் ராம் சரணை இதுவரை பார்த்திராத வித்தியாசமான தோற்றத்தில் திரையில் காட்டவுள்ளார் இயக்குநர் சுகுமார். நவீன் யெர்னேனி, ஒய். ரவிசங்கர், விஜய பிரசாத் பண்ட்ரெட்டி மற்றும் பூஷன் குமார் ஆகியோர் பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். பான் இந்தியா அளவில் மிகப்பெரிய பொழுதுபோக்குத் திரைப்படமாக இதனை உருவாக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.இப்படத்தின் அறிவிப்பு போஸ்டரில் நீலம், பச்சை மற்றும் தங்க நிறங்களின் கலவையில் அழகிய மயில் தோகை இடம்பெற்றுள்ளது. அதில் ராம் சரணின் முகம் இணைக்கப்பட்டுள்ளது. வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர் வெள்ளை நிறப் பின்னணியில் தனித்துவமாகக் காட்சியளிக்கிறது.மேலும், படக்குழு வெளியிட்டுள்ள ‘யூ கேன் இமேஜின்’ என்ற வாசகம், இந்தப் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.*தொழில்நுட்பக் குழு விவரம்:*கதை, திரைக்கதை, இயக்கம்: சுகுமார்,தயாரிப்பு நிறுவனங்கள்: மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் மற்றும் டி-சீரிஸ்,தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி, ஒய். ரவிசங்கர், விஜய பிரசாத் பண்ட்ரெட்டி, பூஷன் குமார்,மக்கள் தொடர்பு: வம்சி-சேகர், மாதுரி மது,மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ

  • மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப்ஸ் அடிக்க, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணைந்துள்ள பிரம்மாண்டமான புதிய திரைப்படம் பூஜையுடன தொடங்கியது
  • Megastar Chiranjeevi Claps- Mega Power Star Ram Charan, Master Storyteller Sukumar, Mythri Movie Makers, Sukumar Writings, T Series, #RC17 # RC2Sukku Launched Splendidly With Muhurtham Ceremony
  • பாட்டு, சமையல், சினிமா, கிரிக்கெட்!’ – ‘இது நம்ம வைப்ஸ்’ என்ற புதிய அடையாளத்துடன் பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தும் சோனி விழா!
  • Double the cravings, double the fun! Mom-to-be Julie makes a wildcard entry into ‘Celebrity MasterChef Tamil
  • இரண்டு மடங்கு ஆசை, இரண்டு மடங்கு மகிழ்ச்சி..’Celebrity MasterChef Tamil’ நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராகக் களமிறங்கும் ஜூலி!!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme