Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

இரண்டு மடங்கு ஆசை, இரண்டு மடங்கு மகிழ்ச்சி..’Celebrity MasterChef Tamil’ நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராகக் களமிறங்கும் ஜூலி!!

Posted on November 1, 2026

அம்மாவாக போகும் ஜூலி, சக அம்மாவாகப் போகும் சமந்தா ரூத் பிரபுவுடன் எதிர்பாராத ஒரு பிணைப்பை உருவாக்குகின்றார்.

‘Celebrity MasterChef Tamil’ நிகழ்ச்சியில் புதிய திருப்பமாக, ஜூலி வைல்டு கார்டு போட்டியாளராக நுழைகின்றார். தன்னுடைய உற்சாகமான குணத்தால் அறியப்படும் ஜூலி, இப்போது முற்றிலும் புதிய அனுபவத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார். கடினமான சமையல் சவால்கள், குறைந்த நேரத்தில் உணவுகளைத் தயாரிப்பது எனத் தனது சமையல் திறமையை நிரூபிக்க அவர் களமிறங்குகிறார்.

ஜூலியின் வருகையை இன்னும் சிறப்பாக்கும் விஷயம் ஒன்று இருக்கின்றது. ஜூலி தனது முதல் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அதேபோல், நிகழ்ச்சியின் நடுவரான சமந்தா ரூத் பிரபுவும் தாய்மையை எதிர்கொள்ளும் இந்தப் புதிய கட்டத்தில் இருக்கிறார்,இருவரும் வாழ்க்கையின் ஒரே மாதிரியான விஷயத்தை கடந்து வருவதால், உணவின் மீதான ஆசைகள், மாறும் சுவைகள் கர்ப்பகாலத்தில் ஏற்படும் சின்ன சின்ன மகிழ்ச்சிகள் என இருவருக்கும் இடையே சுவாரஸ்யமான உரையாடல்கள் உருவாகலாம், ஆனால் ஒருவர் போட்டியாளர் மற்றொருவர் நடுவர் என்பதால் இந்தச் சந்திப்பு எப்படி அமையும் என்பது எதிர்பார்ப்பை கொடுக்கிறது.

இதுகுறித்துப் ஜூலி பேசுகையில், “என் வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் ‘Celebrity MasterChef Tamil’ நிகழ்ச்சியில் பங்கேற்பது எனக்கு இன்னும் சிறப்பான அனுபவமாக இருக்கிறது. சமந்தாவும் இதே அழகான கட்டத்தைக் கடந்து வருகிறார் என்பதை நினைக்கும்போது என்னுடைய உணவு ஆசைகளைப் புரிந்துகொள்ள ஒருவர் இருக்கிறார் என்ற மகிழ்ச்சி வருகிறது. ஆனால், அவர் நடுவர் இருக்கையில் இருப்பதால், எனக்கு எளிதாக மதிப்பெண்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை,நான் இங்கே சமைக்கவும், என்னை நானே சவாலுக்கு உட்படுத்தவும், நடுவர்களை ஆச்சரியப்படுத்தவும் வந்திருக்கிறேன்” என்று கூறினார் ஜூலி.

சமந்தாவுடன் இணைந்து செஃப் வெங்கடேஷ் பட், செஃப் சாஷி மற்றும் செஃப் ஷ்ரேயா அட்கா ஆகியோர் ஒவ்வொரு உணவையும் மதிப்பீடு செய்ய இருக்கின்றனர்,எனவே போட்டியில் விரைவாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு தனது சமையல் திறமையை நிரூபிக்க வேண்டிய சவால் ஜூலிக்கு இருக்கிறது.

ஜூலிக்கும் சமந்தாவுக்கும் இடையே அம்மாவாகப் போகும் அன்பான பிணைப்பு உருவாகுமா? அல்லது ஜூலியின் உணவுகளை மதிப்பிடும்போது சமந்தா இன்னும் கடுமையான நடுவராக மாறுவாரா என்பது எதிர்ப்பார்க்கப்படுகிறது.

‘Celebrity MasterChef Tamil’ நிகழ்ச்சியை Sony VIZHA மற்றும் Sony LIV-ல் காணுங்கள்.

  • மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப்ஸ் அடிக்க, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணைந்துள்ள பிரம்மாண்டமான புதிய திரைப்படம் பூஜையுடன தொடங்கியது
  • Megastar Chiranjeevi Claps- Mega Power Star Ram Charan, Master Storyteller Sukumar, Mythri Movie Makers, Sukumar Writings, T Series, #RC17 # RC2Sukku Launched Splendidly With Muhurtham Ceremony
  • பாட்டு, சமையல், சினிமா, கிரிக்கெட்!’ – ‘இது நம்ம வைப்ஸ்’ என்ற புதிய அடையாளத்துடன் பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தும் சோனி விழா!
  • Double the cravings, double the fun! Mom-to-be Julie makes a wildcard entry into ‘Celebrity MasterChef Tamil
  • இரண்டு மடங்கு ஆசை, இரண்டு மடங்கு மகிழ்ச்சி..’Celebrity MasterChef Tamil’ நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராகக் களமிறங்கும் ஜூலி!!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme