Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

Sony VIZHA வழங்கும் ‘Notebook 90s – Kadhal Flashback’ 90களின் முதல் காதல் நினைவுகளை மீண்டும் கொண்டு வரும் புதிய தொடர்

Posted on November 1, 2026

.

நவம்பர் 23-ம் தேதி மாலை 7:30 மணிக்கு Sony VIZHA மற்றும் Sony LIV-ல் ஒளிபரப்பாகின்றது.

ஒருவரை வகுப்பறைக்குள் பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் காத்திருப்பது, பள்ளியில் பரிமாறிக்கொள்ளும் ஒரு பார்வை நீண்ட நேரம் மனதில் நிற்கும் ஒரு புன்னகை என 90-களில் காதல் என்பது ஓர் அழகான அனுபவமாக இருந்தது,அப்போது சிறிய சந்திப்புகள்கூட மனதில் பல கனவுகளை உருவாக்கும்.

வெட்கம் கலந்த பார்வைகள், சொல்ல முடியாத உணர்வுகள் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு என முதல் காதலின் ஒவ்வொரு தருணமும் தனி அழகைக் கொண்டிருந்தது.

90-களின் முதல் காதலின் இனிமையையும் அழகான நினைவுகளையும் மீண்டும் நினைவுபடுத்தும் வகையில் Sony VIZHA வழங்கும் புதிய தொடர் ‘Notebook 90s – Kadhal Flashback’, இத்தொடர் நவம்பர் 23, 2026 முதல் மாலை 7:30 மணிக்கு Sony VIZHA மற்றும் Sony LIV-ல் ஒளிபரப்பாகின்றது.

1990-களின் திருச்சியைப் பின்னணியாகக் கொண்ட இந்தத் தொடரில்,கௌதம் (Muzzamil Elias), காயத்ரி (Yuva) ஆகியோரின் காதல் கதை சொல்லப்படுகின்றது.

பள்ளிப் பருவத்தில் நடக்கும் ஒரு விளையாட்டுத்தனமான குறும்பில் தொடங்கும் இவர்களின் நட்பு, எதிர்பாராத விதமாக முதல் காதலாக மாறுகிறது. முதல் காதல் தரும் மகிழ்ச்சி மனதில் இருப்பதைச் சொல்லத் தயங்கும் தருணம்,தங்கள் காதலும் ஏற்றுக்கொள்ளப்படலாம் என்ற நம்பிக்கை.,புரிதல் இல்லாத தருணங்கள், மனதை வலிக்கும் பிரிவுகள் என இளமைப் பருவக் காதலின் பல உணர்வுகளை இந்தத் தொடர் அழகாக எடுத்துக்காட்டுகிறது.

பள்ளி வழித்தடங்களில் பல கனவுகள் மலர்ந்த காலத்தையும், ஒரு சிறிய நிகழ்வுகூட பல ஆண்டுகள் மனதில் நிற்கும் நினைவாக மாறுவதையும் இந்தத் தொடர் அழகாக நினைவுபடுத்துகிறது,மேலும் வயதான காயத்ரியாக பாவனா சிறப்புத் தோற்றத்தில் நடித்து, கடந்த காலக் காதல் நினைவுகளையும் இன்றைய வாழ்க்கையையும் இணைக்க செய்கிறார்..

இந்தத் தொடர் குறித்து இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர் கூறுயது:

“Sony VIZHA மற்றும் Sony LIV உடன் இணைந்து ‘Notebook 90s – Kadhal Flashback’ தொடரை உருவாக்குவதன் மூலம் நம் மனதிற்கு நெருக்கமான ஒரு காலத்தை மீண்டும் நினைவுகூர விரும்பினேன்.

90-களில் நட்பு,குடும்பம் மற்றும் உறவுகளுக்கு ஒரு தனி அழகு இருந்தது.அந்தக் காலத்தின் நினைவுகளை மீண்டும் கொண்டுவருவதுடன் அப்போது நம் வாழ்க்கையை அழகாக்கிய அழகிய தருணங்களையும் இந்தத் தொடர் நினைவுபடுத்தும் என்று நம்புகின்றேன்.

இந்தத் தொடரைப் பார்க்கும் ஒருவர் தனது பழைய நண்பரை நினைத்துப் பார்த்தாலோ தன்னுடைய பழைய நினைவுகளைப் புன்னகையுடன் நினைவுகூர்ந்தாலோ அதுவே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி,” என்றார்.

திரைப்பட இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹரின் படைப்பாக்கத்தில் உருவாகும் இந்தத் தொடரை சதாசிவம் இயக்கியுள்ளார்.நீலன் எழுதியுள்ளார். 90-களின் வாழ்க்கை முறையையும் அந்தக் காலத்தின் எளிமையையும் மீண்டும் கொண்டு வரும் இந்தத் தொடர் பள்ளிப் பருவ நட்பு, முதல் காதல் வரை இனிமையான நினைவுகள் மற்றும் வளரும் பருவத்தின் மறக்க முடியாத உணர்வுகளை மையமாகக் கொண்டுள்ளது.

‘Notebook 90s – Kadhal Flashback’ தொடரை நவம்பர் 23, 2026 முதல் மாலை 7:30 மணிக்கு Sony VIZHA மற்றும் Sony LIV-ல் கண்டுகளியுங்கள்.

  • மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப்ஸ் அடிக்க, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணைந்துள்ள பிரம்மாண்டமான புதிய திரைப்படம் பூஜையுடன தொடங்கியது
  • Megastar Chiranjeevi Claps- Mega Power Star Ram Charan, Master Storyteller Sukumar, Mythri Movie Makers, Sukumar Writings, T Series, #RC17 # RC2Sukku Launched Splendidly With Muhurtham Ceremony
  • பாட்டு, சமையல், சினிமா, கிரிக்கெட்!’ – ‘இது நம்ம வைப்ஸ்’ என்ற புதிய அடையாளத்துடன் பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தும் சோனி விழா!
  • Double the cravings, double the fun! Mom-to-be Julie makes a wildcard entry into ‘Celebrity MasterChef Tamil
  • இரண்டு மடங்கு ஆசை, இரண்டு மடங்கு மகிழ்ச்சி..’Celebrity MasterChef Tamil’ நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராகக் களமிறங்கும் ஜூலி!!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme