Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
நயன்தாரா ஒரு ஆம்பளை அஜீத் என்று நினைத்துக்கொண்டே முன்னணி நடிகர்களையெல்லாம்

நயன்தாரா ஒரு ஆம்பளை அஜீத் என்று நினைத்துக்கொண்டே முன்னணி நடிகர்களையெல்லாம்

Posted on September 13, 2019

நடிகர் அஜீத் போலவே படங்களில் நடித்து முடிப்பதோடு என் வேலை ஓவர்.பட புரமோஷனுக்கெல்லாம் என்னை அழைக்கக்கூடாது என்று சமீபகாலமாக அடம்பிடிக்க ஆரம்பித்திருக்கும் நடிகை நயன்தாரா, ‘பிகில்’இசை வெளியீட்டு விஜயே அழைத்தும் வரவிருப்பமில்லை என்று பிடிவாதமாக இருப்பதாக செய்திகள் வருகின்றன.

தீபாவளிக்கு வெளியாக இருக்கும் விஜய்யின் ‘பிகில்’படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா’சர்கார்’படவிழா நடந்த அதே சாய்ராம் கல்லூரியில் வரும் 19ம் தேதி வியாழனன்று நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மானின் லைவ் இசை நிகழ்ச்சி நடக்கவுள்ள நிலையில் படத்தில் விஜய் பாடியுள்ள ‘வெறித்தனம்’பாடலைப் பாடுவது உறுதியாகியுள்ளது. தனது வழக்கமாக குட்டிக்கதைகளை மட்டும் கொஞ்சம் எடுத்துவிடப்போகும் விஜய் அந்த மேடையில் இம்முறை அரசியல் பேசுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.

இப்படி விழா ந்கழ்ச்சிகளை பிரம்மாண்டமாகத் திட்டமிட்டு வரும் தயாரிப்பு நிறுவனம் மற்ற படங்களுக்காக எடுத்திருக்கும் கொள்கையை கொஞ்சம் தளர்த்தி விட்டு ‘பிகில்’பட ஆடியோ விழாவில் கலந்துகொள்ளவேண்டும் என அழைப்பு விடுக்க ஒரு நொடி கூட யோசிக்காத நயன் ‘எனக்கு 6 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்த சிபட விழாவுக்கே போகவில்லை. அதனால் வற்புறுத்தவேண்டாம் என மறுத்துவிட்டாராம். அடுத்து பேசிய இயக்குநர் அட்லிக்கும் நயன் அதே பதிலைக் கூற இறுதியாக தளபதியையே களத்தில் இறக்கிப்பார்க்க அதுவும் படுதோல்வியில் முடிந்ததாம். தன்னை ஒரு ஆம்பளை அஜீத் என்று நினைத்துக்கொண்டே முன்னணி நடிகர்களையெல்லாம் நயன் பகைத்துக்கொள்வது கண்டு செய்வதறியாது திகைத்து நிற்கிறாராம் விக்னேஷ் சிவன்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்கமல்ஹாசன்பெருமையுடன் வழங்கும்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும்”தர்மன்”இயக்கம்: அஸ்வத் மாரிமுத்து
  • சிங் கீதம் திரை விமர்சனம்
  • அந்தரன் திரை விமர்சனம்
  • அனந்தன் காடு திரை விமர்சனம்
  • *கோபம், வஞ்சம், வெற்றி – மனதின் போராட்டத்தை சொல்லும் “வஞ்சம் தீர்” பாடல்!*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme