Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

மாரியப்பன் சின்னாவின் முதல் திரைப்படமான ‘Immortal’ அக்டோபர் 30-ம் தேதி Sony LIV-ல்

Posted on October 24, 2026

மாரியப்பன் சின்னாவின் முதல் திரைப்படமான ‘Immortal’ அக்டோபர் 30-ம் தேதி Sony LIV-ல் பிரீமியராகிறது!
எதிர்பாராத சந்திப்பு, மர்மமான ஒரு பெண், மறைக்கப்பட்ட ரகசியம் எனப் பல திருப்பங்களுடன் வந்த திரைப்படம் ‘Immortal’.

காதல், மர்மம் மற்றும் அமானுஷ்ய திகில் கலந்த இப்படத்தை அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா எழுதி இயக்கியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் அக்டோபர் 30,2026 அன்று Sony LIV-ல் வெளியாகின்றது.

சென்னையில் நடக்கும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. அச்சகத்தில் வேலை செய்யும் Magi (G. V. பிரகாஷ் குமார்), குறைந்த வாடகையில் தங்குவதற்கு ஓர் இடத்தைத் தேடுகிறார். அப்போது சிந்து (கயாடு லோஹர்) என்ற மர்மமான பெண்ணைச் சந்திக்கின்றார். சிந்து தனது ஆடம்பரமான வீட்டில் ஒரு அறையை மிகவும் குறைந்த வாடகைக்கு தருகிறார்.

ஆனால் முதலில் நல்ல வாய்ப்பாகத் தெரிந்த இந்த விஷயம் பின்னர் பல மர்மமான சம்பவங்களால் பயத்தை ஏற்படுத்துகின்றது.

சிந்துவின் வாழ்க்கையில் இருக்கும் ரகசியங்களை மாகி அறியத் தொடங்கும்போது அவர் எதிர்பார்க்காத பல விஷயங்கள் வெளியே வருகின்றன..

G.V.பிரகாஷ் குமார் கூறியது:

“Magi நம்மைப் போன்ற ஒரு சாதாரண மனிதர். அவர் எதிர்பார்க்காத ஒரு சூழ்நிலையில் சிக்கிக்கொள்கிறார். இந்தக் கதாபாத்திரத்தில் எனக்குப் பிடித்த விஷயம் என்னவென்றால், பார்வையாளர்களைப் போலவே மாகியும் ஒவ்வொரு விஷயத்தையும் புதிதாகக் கண்டுபிடிக்கின்றார்,அவரது பயணத்தில் ஆர்வம் பயம் மற்றும் குழப்பம் எனப் பல விஷயங்கள் இருக்கும்,அதனால் இந்தக் கதாபாத்திரம் எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

இப்போது Sony LIV-ல் ரசிகர்கள் இப்படத்தைப் பார்த்து அதன் மர்மத்தைத் தெரிந்துகொள்ளப் போவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்றார்.

G. V. பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹர் ஆகியோருடன் டி.எம். கார்த்திக், குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர், அர்ஷு மகாராஜன்,பெமா சாம்சோ, சுனிதா ஸ்ரேஸ்தைன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘Immortal’ திரைப்படம் அக்டோபர் 30, 2026 அன்று Sony LIV-ல் பிரீமியர் செய்யப்படுகிறது.

  • Ramayana’s Mangala Vanname OUT NOW; Brings Lord Rama and Maa Sita’s Love Story toLife Through Stunning Visuals and Soulful Music
  • ராமர் மற்றும் சீதையின் அன்பை பேசும் ‘மங்கள வண்ணமே’ பாடல் ‘ராமாயணா’ திரைப்படத்தில் இருந்து வெளியானது
  • ஜோஜு ஜார்ஜ் இயக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • Joju George’s Next Directorial Venture After ‘Pani’, ‘Paripadi’ First Look Out; Worldwide Release in December
  • It’s a Medical Miracle’ clocks over 15 million minutes of watch time in the first week on ManoramaMAX; now streaming in 4 languages
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme