Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ட்ரோன்ஸ் திரை விமர்சனம்

Posted on October 16, 2026

ரேட்டிங்: 3.7/5

பரிதாபங்கள்’ புகழ் டிராவிட் செல்வம் கதாநாயகனாக அறிமுகமாகி, ஆர். ராகவ் மிர்தாத் இயக்கத்தில் இன்று (அக்டோபர் 16, 2026) வெளியாகியுள்ள ‘ட்ரோன்ஸ்’ (Drones) திரைப்படம், மாயாஜாலக் காட்சிகளுடன் படம் விறுவிறுப்பாகவும், சிரிப்பூட்டும் வகையிலும் அமைந்துள்ளதால் திரையில் குழந்தைகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. காதல் , நட்பு, மற்றும் சமூகக் கருத்துகளும் கலந்த குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஃபேண்டஸி ஹாரர்-காமெடி திரைப்படமாக ட்ரோன்ஸ் குடும்பத்தோடு திரையரங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது .

யூடியூபில் இருந்து வெள்ளித்திரைக்கு நாயகனாக மாறியுள்ள டிராவிட், அஞ்சலி மற்றும் தீபக் ஆகிய மூவரின் கூட்டணி படத்தைத் தாங்கிப் பிடிக்கிறது. குறிப்பாக அஞ்சலிக்கு ட்ரோன்ஸ் திரைக்கதையில் வலுவான காட்சிகள் கொடுக்கப்பட்டு அவர் நடிப்பு திரையில் தனித்துவமாக ரசித்த வைத்துள்ளது .
சூனியக்காரியாக வரும் தேவதர்ஷினியின் அனுபவ நடிப்பும் அவர் கதாபாத்திரமும், படத்தின் இறுதியில் வரும் எதிர்பாராத கிளைமாக்ஸ் ட்விஸ்ட்டு திரையில் அனைவரும் ரசிக்கும் படி உள்ளது.

ட்ரோன்ஸ் திரைக்கதை தொடக்கத்தில் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒரு பெண் உள்ளிட்ட மூன்று நண்பர்கள் (டிராவிட், அஞ்சலி, தீபக்), முவரும் ஒரு மர்மமான வீட்டிற்குள் நுழைகிறார்கள். அந்த விசித்திரமான வீட்டில் கனவுகளில் மட்டுமே சாத்தியமான பல மர்மங்களும், மாயாஜாலங்களும் நிஜமாக நடக்கத் தொடங்குகின்றன. அங்கு அவர்கள் சந்திக்கும் விசித்திரமான சம்பவங்களும், சூனியக்காரி பேயிடம் இருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதும் தான் ‘ட்ரோன்ஸ்’ படத்தின் திரைக்கதை.

ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவு குறுகிய களத்திற்குள் படத்திற்குத் தேவையான மாயாஜாலக் காட்சிகளைத் தர முயன்றுள்ளது. ஹரி எஸ்.ஆரின் இசையும், பாடல்களும் படத்திற்குப் பலம் சேர்க்கின்றன

ட்ரோன்ஸ் திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் மாயாஜால திரை விருந்தாக திரையரங்குகளில் வெளியாகி சிறுவர்கள் முதல் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வருகிறத.

  • இந்தியாவின் முதல் வெர்டிகல் திரைப்பட விழா – விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது!
  • ஜெயிலர் 2 திரை விமர்சனம்
  • ட்ரோன்ஸ் திரை விமர்சனம்
  • கில்ட் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், “ஹபீபி” படத்திற்கு பாராட்டு விழா !
  • புதிய சிந்தனைகளுடன் உருவாகிறது ‘மந்திரா ஸ்டுடியோஸ்’ (MANTHIRA STUDIOS) – ஆர்.டி. ராஜா அறிவிப்பு!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme