Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

“சிக்மா’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானது எனக்கு பெருமை”-நடிகை ஃபரியா அப்துல்லா!

Posted on October 12, 2026

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் ‘ வெளியான ‘சிக்மா’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் பெற்று வருகிறது. ரசிகர்களிடையே கிடைத்து வரும் நேர்மறையான வாய் வழிப் பாராட்டுகளால், படத்தைப் பார்க்க வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஆக்‌ஷன் அட்வென்ச்சர் ஹெய்ஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் படமாக உருவாகியுள்ள ‘சிக்மா’ மூலம் நடிகை ஃபரியா அப்துல்லா தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். படத்தின் வெற்றி அவரது அறிமுகத்தை இன்னும் ஸ்பெஷலாக்கியுள்ளதுஇந்த திரைப்படத்தில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா மற்றும் அறிமுக இயக்குநர் ஜேசன் சஞ்சய் என இளம் திறமையாளர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.

ஃபரியாவைப் பொறுத்தவரை, ‘சிக்மா’ திரைப்படம் தமிழ்த் திரையுலகில் அவருடைய அறிமுகம் மட்டுமல்லாமல், நடிப்பு, நடனம், நாடகம், ராப் இசை மற்றும் ஃபிலிம் மேக்கிங் என பல்வேறு துறைகளில் அவர் மேற்கொண்டு வரும் பயணத்தில் மற்றொரு முக்கியமான மைல்கல்லாகவும் அமைந்துள்ளது.

படத்திற்கு கிடைத்து வரும் திரையரங்க வரவேற்பு மற்றும் ஜேசன் சஞ்சயுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து ஃபரியா பகிர்ந்து கொண்டதாவது, “சஞ்சயுடன் பணியாற்றியது அற்புதமான அனுபவம். அவர் உருவாக்க விரும்புவதைப் பற்றி மிகவும் தெளிவாகவும், நம்பிக்கையுடனும் படமாக்கினார். நிதானமான அவரது அணுகுமுறையால் நாங்களும் உற்சாகமாக பணியாற்றினோம்.

‘சிக்மா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியிருப்பது எனக்கு பெருமை. தற்போது படத்தை திரையரங்குகளில் பார்த்து, ரசிகர்களிடமிருந்து நேர்மறையான வரவேற்பைப் பெறுவது, இந்தப் பயணத்தை மேலும் மறக்க முடியாததாக மாற்றியுள்ளது” என்றார்.

ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த ஃபரியா அப்துல்லா, நடிப்பைத் தாண்டியும் பல்வேறு கிரியேட்டிவ் விஷயங்களையும் தொடர்ந்து செய்து வருகிறார். சிறு வயதிலிருந்தே நடனத்தில் ஆர்வம் கொண்ட அவர், ஸ்டுடியோ மற்றும் ஸ்ட்ரீட் நடன வடிவங்கள் உள்ளிட்ட பல்வேறு நடன முறைகளில் பயிற்சி பெற்றுள்ளார். உயர்நிலைப் பள்ளிப் படிப்பின்போதும் நுண்கலை மற்றும் இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டுள்ளார். அதன் பின்னர் மாஸ் கம்யூனிகேஷன் படித்த அவர், ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நாடகம் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பயிற்சி பெற்றார். இதன் மூலம் நடிப்பு மற்றும் கதை சொல்லலில் வலுவான அடித்தளத்தை உருவாக்கிக் கொண்டார்.

நடிப்புடன் இணைந்து இரண்டு ஆண்டுகளாக அவர் ராப் இசையை எழுதி, பாடி வருவதுடன், இசை வீடியோக்களை இயக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் ஒரு இசை வீடியோவை தயாரித்ததன் மூலம் கேமராவுக்குப் பின்னால் தனது பயணத்தில் மற்றொரு முக்கியமான அடியை எடுத்து வைத்துள்ளார்.

ஃபரியாவின் நடிப்புப் பயணம், 2021 மார்ச் மாதம் வெளியான ‘ஜதி ரத்னலு’ திரைப்படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகில் தொடங்கியது. அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், ஃபரியாவை அதிகமான ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. அதன் பின்னர் ‘மது வடலரா 2′, ‘ஆ ஒக்கட்டி அடக்கு’, ‘குர்ராம் பாப்பி ரெட்டி’, ‘கயாபடா சிம்ஹம்’, ‘ராவணசுறா’ மற்றும் ‘லைக் ஷேர் சப்ஸ்கிரைப்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், சோனிலிவ்வின் வெப் சீரிஸான ‘தி ஜென்காபுரு கர்ஸ்’ மூலம் இந்தி திரைத்துறையிலும் அவர் அறிமுகமானார்.

‘சிக்மா’ படத்தின் வெற்றியை அடுத்து விஜய் ஆண்டனி நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் ‘வள்ளிமயில்’ திரைப்படத்திலும் ஃபரியா நடித்துள்ளார்.

‘சிக்மா’ திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ், சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். இப்படத்தில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜேபி, மகாலட்சுமி, ஷீலா ராஜ்குமார், கமலேஷ் மற்றும் கிரண் கொண்டா ஆகியோர் நடித்துள்ளனர். ஜேசன் சஞ்சய் இப்படத்தை இயக்கியுள்ளார். தமன் எஸ். இசையமைத்துள்ளார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவையும், பிரவீன் கே.எல். படத்தொகுப்பையும் மேற்கொண்டுள்ளனர். சஞ்சீவ் கிரியேட்டிவ் புரொடக்ஷனை கவனித்துள்ளார்.

  • விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
  • சுஹாஸ் (Suhas) நடிக்கும் ‘ஹைட் & சில்க்’ (‘Hide & Silk’ ) படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு!
  • On His Grandfather Allu Ramalingaiah’s Birth Anniversary, Allu Arjun Marks the Beginning of his New Creative Office Space ‘ICONZA’
  • “சிக்மா’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானது எனக்கு பெருமை”-நடிகை ஃபரியா அப்துல்லா!
  • Sigma’s Success Makes My Tamil Debut Even More Special’ – Faria Abdullah
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme