
இயக்குநர் சாரஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல், அர்ச்சனா மற்றும் விஜய் விஷ்வா நடிப்பில் இன்று (செப்டம்பர் 18, 2026) வெளியான ‘பாரிஸ் கஃபே’ (Paris Cafe) திரைப்படம், சாதி மற்றும் ஆணவக் கொலை போன்ற சமூக அவலங்களுக்கு எதிரான அரசியலையும் காதல்,குடும்ப உறவுகளையும் பேசும் ஒரு சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் திரைப்படமாக வெளியாகியுள்ளது.
பாரிஸ் கஃபே திரைப்படத்தின் திரைப்படத்தின் தொடக்கத்தில் அமெரிக்காவின் போஸ்டன் நகரில் வசித்து வரும் ஒலி (அர்ச்சனா) தனியார் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் வேலை கிடைக்கிறது இதனை தனது அப்பா கௌதம் (குரு சோமசுந்தரம் மற்றும் அம்மா தாரா (அனுமோல்) ஆகியோரிடம் மகிழ்ச்சியான செய்தியை கூறுவதற்காக போன் செய்கிறார் அப்பொழுது இருவருமே போனை எடுக்காமல் போக அவரது காதலன் கவின் (விஜய் விஷ்வா தொலைபேசியில் அழைத்து தனக்கு கிடைத்த வேலையை மகிழ்ச்சியான தெரிவிக்கிறார்.
மறுநாள் நாயகி அப்பா கௌதம் (குரு சோமசுந்தரம்) போனில் பேச நாயகியின் அப்பா அம்மா இருவரும் இடையே இருக்கும் கருத்து வேறுபாட்டால் அவர்கள் பிரிந்து வாழ்வதை அறிந்து அதிர்ச்சியடைகிறார். அவர்களைச் சேர்த்து வைக்க ஒலி (அர்ச்சனா) இந்தியா வருகிறார், கடந்த காலத்தின் மறைக்கப்பட்ட உண்மைகளும், ஒரு நேர்மையான மருத்துவர் சமூகப் பிரச்சினைக்காக அரசியல் தலைவர்களின் எதிர்பை எதிர்கொள்ளும் சாமானிய மனிதராகவும் மற்றும் ஆணவக் கொலைக்கு எதிரான ஒரு சமூகப் பிரச்சினையை நேர்மையாகவும் வலியின் அமைதியாகவும் திரையில் காண்போரை சிந்திக்கவும், குடும்ப உணர்வோடு ரசிக்கவும் வைத்துள்ளது இந்த ‘பாரிஸ் கஃபே’ திரைப்படம்.
