Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

என்ன விலை திரை விமர்சனம்

Posted on September 18, 2026

ராமேஸ்வரம் கடலில்
மீன்பிடிக்கச் செல்லும் மீனவரான தவசி (கருணாஸ்), பகுதி நேர வேலையாக ராமேஸ்வரம் தீர்த்த கிணற்றில் திதி கொடுப்பவர்கள் கிணற்றில் வீசும் சில்லரைக் காசுகளை நீருக்கடியில் நீந்தி சென்று சேகரித்து தனது வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறார் கருணாஸ். அப்படி ஒரு நாள் தீர்த்த கிணற்றில் சில்லரை காசுகளை தேடும் போது அவரது கையில் விலை உயர்ந்த தங்க பதக்கம் கிடைக்கிறது அதனை கருணாஸ் போலீசில் நேர்மையோடு ஒப்படைக்க காவல் துறை அதிகாரி ஒருவர் தங்கத்திற்கு ஆசை பட்டு தவசி கருணாஸ் மீது போய் திருட்டு வழக்கு போடுகிறார் அதனை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்லும் தவசி,
தான் திருடன் இல்லை, அந்தப் பதக்கம் தீர்த்த கிணற்றில் கிடைத்தது” .அந்தப் பதக்கம் அரசுக்குச் சொந்தமானதா அல்லது தவசிக்குச் சொந்தமானதா என்ற சட்ட விவாதமாக படம் நகர்கிறது. அவருக்கு ஆதரவாக வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நிமிஷா சஜயன் வாதாடுகிறார்.

ஒரு எளிய மீனவராக, நேர்மையான மனிதராக கருணாஸ் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தனிமனிதனாக அவர் நியாயம் கேட்கும் காட்சிகள் பிறையில் காண்பவரை தனி மனிதனின் நேர்மையை ரசிக்கவும் சமுதாயத்தில் நடக்கும் ஆவணத்தை சிந்திக்கவும் வைத்துள்ளது.

தங்களது அனுபவம் அடைப்பின் மூலம் திரைக்கதைக்கு நிமிஷா சஜயன், ஒய்.ஜி.மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், நிழல்கள் ரவி கதைக்கு பலம் சேர்த்துள்ளனர்.

சாம் சி.எஸ். அவர்களின் பின்னணி இசை மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. குறிப்பாக, தண்ணீரின் ஒலியைப் பயன்படுத்தி அவர் அமைத்துள்ள இசை திரையில் புது அனுபவத்தை கொடுத்துள்ளது.

ஆண்டனியின் எதார்த்தமான ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கிறது.

  • நல்ல படம் திரை விமர்சனம்
  • என்ன விலை திரை விமர்சனம்
  • தி டார்க் ஹெவன் திரை விமர்சனம்
  • சண்டக்காரி திரை விமர்சனம்
  • ஷபீர் சுல்தான் – Chinmayi sripaada இணைந்த ‘வான்மதி’ பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme