
மைத்ரி என்பது வெறும் பொழுதுபோக்குத் திரைப்படம் மட்டுமல்ல அது சமூகத்தின் இருண்ட பக்கங்களை வெளிச்சமிட்டுக் காட்டி, பார்வையாளர்களைச் சிந்திக்க வைக்கும் ஒரு உன்னதமான காதல் திரைக்கதை. இன்றைய சமுதாயத்தில் இளைஞர்கள் தங்களின் உணர்வுகளையும் சமுதாய பொறுப்புகளையும் இயல்பாக சொல்லும் ஒரு திரை காவியம் மைத்திரி இதனை குடும்பத்துடன் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு காதல் சமுதாய உணர்வுள்ள ஒரு திரைப்படம்.
மைத்திரி திரைப்படத்தில் கதை முக்கோணக் காதல் கதை (Love Triangle) மற்றும் உறவுகளுக்கு இடையே உள்ள சிக்கல்களைப் பேசுகிறது. சமூகத் தடைகள், குடும்ப அழுத்தங்கள் மற்றும் தனிப்பட்ட கனவுகளுக்கு மத்தியில், தங்களின் சுதந்திரமான வாழ்க்கையை உருவாக்கப் போராடும் இளைஞர்கள், எவ்வாறு இணைந்து நீதிக்காகப் போராடுகிறார்கள் என்பதை இத்திரைப்படம் திரையில் காண்பவரை சிந்திக்கவும் ரசிக்கவும் வைத்துள்ளது மைத்திரி திரைக்கதை.
சமூக அக்கறை மற்றும் எதார்த்தமான உறவுச் சிக்கல்களைப் பேசியதற்காக இத்திரைப்படம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தவர்களின் இயல்பான நடிப்பு மற்றும் படத்திற்கு பாடல்கள் பலம் சேர்க்கின்றன.
மலையாளத் திரையுலகிலிருந்து தமிழ் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்திருக்கும் இசையமைப்பாளர் ஜோயல் ஜான்ஸ், தன் துடிப்பான பின்னணி இசையால் காட்சிகளுக்குத் தனி உயிர் கொடுத்துள்ளார் திரையில் காண்பவரை இசையோடு ரசிக்க வைத்துள்ளார் இசையமைப்பாளர்
குப்பை மேட்டில் நாயகன் காதல் தோல்விகள் அமர்ந்திருக்கும் பொழுது அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட மனிதனின் பெண்கள் இயற்கையாகவே பல வழிகளையும் வேதனைகளையும் சந்திக்கும் பெண்கள் 100 மடங்கு பலம் சார்ந்தவர்கள் பெண்கள் இயல்பான உடல்சார்ந்த வேதனைகளையும், இயற்கை அவர்களுக்கு அளித்துள்ள வலிகளையும் ஆண்கள் ஒருபோதும் உணர்ந்து கொள்ள முடிவதில்லை என்பதை, குப்பைமேட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மனிதராக ஒருவரின் உரையாடல் மூலமாக விவரிக்கும் காட்சி சமூகத்தை உலுக்கி யோசிக்க வைக்கிறது.