நாயகன் கார்த்திக் சிறுவயதிலேயே தனது தாயை இழந்து தன் அப்பாவின் அரவணைப்பில் வளர்கிறார் நாயகனின் அப்பா குடிக்க அடிமையாகி எனது மகனை சரியாக பார்த்துக் கொள்ளாமல் போகிறது அதே நிலைமையில் தனிமையில் தனது இளமை காலத்தை கடந்து வருகிறார் நாயகன்.

கல்லூரி படிப்பை முடித்து வேலைக்கு செல்லும் நாயகன் தனது நண்பர்களுடன் அனைத்தையும் பகிர்ந்து கொண்டு வாழ்கிறார் தன்னுடன் நண்பர்கள் திருமணம் செய்து கொண்டோம் காதலித்துக் கொண்டும் இருக்கின்றனர் ஆனால் நாயகன் தனது இளமையை விலை மாது மற்றும் குடிப்பழக்கத்திற்கும் புகைப்படத்திற்கும் அடிமையாகி தனது இளமை காலத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது விலைமாதுவான மது என்ற பெண் நாயகனை சந்திக்கிறார் இருவருக்கும் ஏற்படும் சந்திப்பு மற்றும் ஒரு நாள் இரவுக்கான அந்த முடிவு முடிவுக்கு வருகிறது அதனைத் தொடர்ந்து தனக்கு உதவிடும் நட்பாகவும் காதலிக்கவும் தொடங்குகிறார் நாயகன் விலைமாதுவாக அந்த நாயகி மது காதலியாக மாறுகிறார் இதனை தொடர்ந்து இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர் இவர்கள் இடையே சிறு மன உளைச்சல் ஏற்பட அதனைத் தொடர்ந்து இருவரும் பிரிகின்றனர்.தனிமையினாலும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி, மது மற்றும் புகைப் பழக்கத்திற்கு அடிமையாகி வாழ்கிறான் காதலின் பிரிவை நாயகன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதுமே படத்தின் திரை கதையாகும்.

இன்றைய காலகட்டத்தில் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகளை எதார்த்தமான திரைக்கதை கொண்டு காதலின் அழகை மட்டுமின்றி, காதல் தோல்வி மற்றும் பிரிவுக்குப் பிறகு ஒரு மனிதன் சந்திக்கும் மனப்போராட்டங்களை Gen-Z இளைஞர்கள் எளிதில் தங்களை இணைத்துக் கொள்ளும் வகையில் (Relatable) எதார்த்தமாகக் காட்டியுள்ளனர்.