Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

சென்னையில் டாக்டர். பி 360-ன் ‘பேபி ஸ்கின் ஹேர்லெஸ் புரோகிராம்’ பிரம்மாண்ட தொடக்கத்தில்

Posted on September 5, 2026

சென்னையில் டாக்டர். பி 360-ன் ‘பேபி ஸ்கின் ஹேர்லெஸ் புரோகிராம்’ பிரம்மாண்ட தொடக்கத்தில் பாரி இளவழகன், அர்ச்சனா ரவிச்சந்திரன், கிஷன் தாஸ், தீப்ஷிகா சந்திரன், பவியாத்ரிகா, ராணவ், இஸ்மத் பானு உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பங்கேற்பு!

சென்னையில் நடைபெற்ற டாக்டர். பி 360-ன் ‘பேபி ஸ்கின் ஹேர்லெஸ் புரோகிராம்’ அறிமுக விழாவில், தமிழ் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். டெகா இத்தாலி (DEKA Italy) நிறுவனத்தின் மேம்பட்ட Motus AZ+ லேசர் தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தை, டாக்டர் பி 360 டெர்மட்டாலஜி எக்ஸ்பிரியன்சியல் செண்டரின் நிறுவனர் மற்றும் சரும நிபுணர் டாக்டர் பைரவி செந்தில் அறிமுகப்படுத்தினார். சருமப் பராமரிப்பில் பயாலஜி அடிப்படையிலான தனது அணுகுமுறையுடன், சர்வதேச அளவிலான லேசர் தொழில்நுட்பத்தை இணைத்து, தனிநபரின் தேவைக்கேற்ற சிகிச்சை முறையை இந்தத் திட்டம் வழங்குகிறது.

இந்த நிகழ்ச்சியில், ‘ஜமா’ திரைப்படத்தின் நடிகரும் இயக்குநருமான பாரி இளவழகன் மற்றும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 வெற்றியாளர் அர்ச்சனா ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். மேலும் கிஷன் தாஸ், தீப்ஷிகா சந்திரன், ஏஞ்சலின், பவியாத்ரிகா, ராணவ், இஸ்மத் பானு மற்றும் சுமித்ரா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதன் மூலம் தமிழ் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த நடிகர்கள், தொலைக்காட்சி பிரபலங்கள் மற்றும் டிஜிட்டல் படைப்பாளர்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் திரண்டனர்.

நடிகர், இயக்குநர் பாரி இளவழகன் பகிர்ந்து கொண்டதாவது, ”இந்த நிகழ்வு தனிப்பட்ட முறையிலும் எனக்கு முக்கியமானது. டாக்டர் பைரவி செந்திலிடம் சருமப் பராமரிப்பு சிகிச்சை பெற்று வருகிறேன். டாக்டர் பைரவியை எனக்கு நீண்ட காலமாகத் தெரியும். சரும மருத்துவத் துறையில் எனக்கு இன்ஸ்பயரிங் அவர்தான். அவரது அணுகுமுறை, நோயாளிகளுக்கான அர்ப்பணிப்பு மற்றும் டாக்டர். பி 360-ஐ அவர் உருவாக்கிய விதம் அனைத்தும் பாராட்டுக்குரியவை” என்றார்.

இந்த நிகழ்வில் இத்தாலியைச் சேர்ந்த DEKA நிறுவனத்தின் ஃபிரான்சிஸ்கோ பாடியும் கலந்துகொண்டார். டாக்டர் பைரவி செந்திலின் பணிகள் குறித்தும், சரும மருத்துவத் துறையில் அவர் ஏற்படுத்தி வரும் தாக்கம் குறித்தும் அவர் பேசினார். மேலும், DEKA-வின் தொழில்நுட்பத்தை டாக்டர் பைரவியின் மருத்துவ அணுகுமுறையுடன் இணைப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார். இதன் மூலம் இந்த அறிமுக நிகழ்வுக்கு சர்வதேச அளவிலான சிறப்பும் கிடைத்தது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் புரோகிராமின் முக்கிய அம்சமாக DEKA நிறுவனத்தின் Motus AZ+ மேம்பட்ட லேசர் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. அழகியல் மற்றும் சரும மருத்துவப் பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த மேம்பட்ட லேசர் தளத்தை, டாக்டர் பி 360 தனித்துவமான சிகிச்சை அணுகுமுறையுடன் பயன்படுத்துகிறது. ஒவ்வொரு நபரின் சருமத்தின் பயாலஜி, சிகிச்சையின்போது வசதி மற்றும் தனிப்பட்ட தேவைகளைப் புரிந்துகொண்ட பின்னரே, அவர்களுக்கு ஏற்ற சிகிச்சை மற்றும் நீண்டகால பராமரிப்பு முறையைத் தீர்மானிப்பதே இதன் நோக்கம்.

“தொழில்நுட்பம் மட்டுமே முக்கியமானது அல்ல. ஒரு நபரின் தனிப்பட்ட தேவைகளுக்கும், அவரது ஸ்கின் பயாலஜிக்கும் ஏற்ப சரியான அனுபவத்தையும் சிகிச்சை முறையையும் உருவாக்கும்போதுதான் தொழில்நுட்பத்தின் உண்மையான மதிப்பு வெளிப்படுகிறது. டாக்டர் பி 360-ல் எங்களது அணுகுமுறை எப்போதும் முதலில் தோலைப் புரிந்துகொள்வது. அதன் பின்னர் சரியான தொழில்நுட்பம், சிகிச்சை மற்றும் பராமரிப்பு முறையைத் தேர்ந்தெடுப்பது. ‘டாக்டர் பி பேபி ஸ்கின் ஹேர்லெஸ் புரோகிராம்’ என்பது முன்பு நான் குறிப்பிட்டதன் தொடர்ச்சி” என்று டாக்டர் பைரவி செந்தில் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் அழகுப் பராமரிப்பு குறித்த சுவாரஸ்யமான கருத்துகளும் இடம்பெற்றன. நடிகர் கிஷன் தாஸ், தோல் பராமரிப்பு குறித்த தனது கருத்துகளை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டதுடன், டாக்டர் பி நிறுவனத்தின் சேவைகளைப் பயன்படுத்துவதில் தனக்கு உள்ள ஆர்வத்தையும் தெரிவித்தார்.

அவருடன் தமிழ் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த பல இளம் மற்றும் பிரபலமான முகங்கள் பங்கேற்றது, இந்த நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்தது.

டாக்டர் பைரவி செந்தில் அவர்களால் 2025 ஜனவரி 19 அன்று தொடங்கப்பட்ட தி டாக்டர் பி 360 டெர்மட்டாலஜி எக்ஸ்பிரிமெண்டல் செண்டர் தோல், முடி, நலவாழ்வு மற்றும் நீண்ட நாள் பராமரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதோடு மட்டுமல்லாது 360 டிகிரி ஒருங்கிணைந்த சுகாதாரச் சூழலை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் இந்த அமைப்பில், இந்தியாவின் முதல் மெடிக்கல் கிரேடு சலூன் எனக் குறிப்பிடப்படும் பீவெல் மெடி சலூன் (BeWell Medi Salon) மற்றும் டாக்டர் பைரவியால் உருவாக்கப்பட்ட தோல் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையிலான AAVÉDERM ஸ்கின்கேர் மற்றும் நியூட்ராசூட்டிக்கல் பிராண்டும் இடம்பெற்றுள்ளன.

பீவெல் மெடி சலூன் தொழில்முறை சலூன் பராமரிப்பை இந்த ஒருங்கிணைந்த அமைப்புடன் இணைக்கிறது. அதேபோல், AAVÉDERM மூலம் தோல் மருத்துவ நிபுணர்களால் உருவாக்கப்பட்ட ஸ்கின்கேர் மற்றும் நியூட்ராசூட்டிக்கல் தயாரிப்புகள் அன்றாட சுய பராமரிப்புக்குக் கொண்டுவரப்படுகின்றன. இதன் மூலம் டாக்டர் பி 360-ன் நோக்கம் மருத்துவச் சிகிச்சைகளைக் கடந்தும் விரிவடைகிறது.

‘டாக்டர் பி பேபி ஸ்கின் ஹேர்லெஸ் புரோகிராம்’ அறிமுகத்தின் மூலம், மேம்பட்ட தொழில்நுட்பம், தனிப்பட்ட தோல் மருத்துவப் பராமரிப்பு மற்றும் நீண்டகால சரும நலவாழ்வு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் தனது பயணத்தில் டாக்டர் பி 360 மேலும் ஒரு முக்கியமான அடியை எடுத்துள்ளது.

தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி பிரபலங்களின் பங்கேற்பு, இந்தச் சிறப்பு நிகழ்ச்சிக்கு கூடுதல் கவனத்தையும் சிறப்பையும் கொடுத்தது.

  • K-Town Celebrities Grace the Grand Launch of Dr. B 360’s ‘Baby Skin Hairless Programme’ in Chennai
  • சென்னையில் டாக்டர். பி 360-ன் ‘பேபி ஸ்கின் ஹேர்லெஸ் புரோகிராம்’ பிரம்மாண்ட தொடக்கத்தில்
  • ஏழு வயதே ஆகும் ரூஹி மொஹஸ்ஸாப் இந்தியாவின் மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவரை சந்தித்தார்!
  • 7-YEAR-OLD ROOHI MOHAZZAB MEETS HON’BLE VICE PRESIDENT OF INDIA
  • Wild Tamil Nadu to be distributed through PVR Cinemas, Bringing t
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme