Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

‘மொத ராத்திரி’ தேவியாக மனம் கவர்ந்த பானுப்பிரியா – வெற்றிமாறன், மாரி செல்வராஜ், தனுஷ் படங்களில் அடுத்தடுத்து!

Posted on August 26, 2026

சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் தேவி கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை பானுப்பிரியா. சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என கனவு கண்டவர் லயோலா கல்லூரியில் விஸ்காம் முடித்திருக்கிறார். பக்ருதீன் மாஸ்டர் நாடக்குழுவில் இணைந்தவர் அங்கிருந்து முன்னணி மீடியா நிறுவனங்களில் வேலை செய்து பின்பு சினிமாவில் நுழைந்தார்.

தனது சினிமா பயணம் பற்றியும் ‘மொத ராத்திரி’ படம் குறித்தும் பானுப்பிரியா பகிர்ந்து கொண்டதாவது, “பக்ருதீன் சார் மூலமாக ‘கூழாங்கல்‘ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படம் பல சர்வதேச விருதுகளை வாங்கி குவிக்கும் என அப்போது நான் எதிர்பார்க்கவில்லை. என் கரியரில் அடுத்த நிலைக்கு போகும் வாய்ப்பாக ‘தாய் கிழவி’ படம் அமைந்தது. இப்போது ‘மொத ராத்திரி’ படத்தில் பக்ஸ் சாரின் மனைவி தேவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். பலரிடமும் பாராட்டுகளை இந்த கதாபாத்திரம் பெற்று தந்துள்ளது.

அடுத்து வெற்றிமாறன் சாரின் ‘ராஜன் வகையறா’ படத்தில் கிஷோர் சார் மனைவி நடித்து வருகிறேன். இதுமட்டுமல்லாமல், சந்தானம் சார் கதாநாயகனாக நடிக்கும் ‘லவ் பைட்’, ‘அமரன்’ பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி- தனுஷின் ‘ஓம்’ திரைப்படம், இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் என நடித்து வருகிறேன். பெரிய இயக்குநர்கள் படத்தில் நானும் ஒரு அங்கம் என்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்கிறார்.

  • ‘மொத ராத்திரி’ தேவியாக மனம் கவர்ந்த பானுப்பிரியா – வெற்றிமாறன், மாரி செல்வராஜ், தனுஷ் படங்களில் அடுத்தடுத்து!
  • Banupriya Wins Hearts as Devi in ‘Motha Rathiri’; Joins Exciting Projects with Vetrimaaran, Dhanush & Mari Selvaraj
  • Goodwill Entertainments releases ‘Operation Tral’ Teaser, offering a high-impact glimpse into Jayasurya’s high-stakes NIA mission
  • குட்வில் எண்ட்ர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் வெளியிட்ட ‘ஆபரேஷன் டிரால்’ டீசர் பரபரப்பான என்ஐஏ அதிகாரி ஜெயசூர்யாவின் உலகத்திற்கு பார்வையாளர்களை அழைத்து செல்கிறது!
  • *_Avengers Fans, Assemble One More Time!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme