Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

பியார் பிரேமா கல்யாணம் விமர்சனம்

Posted on August 21, 2026

பியார் பிரேமா கல்யாணம்’ (Pyaar Prema Kalyanam) நெட்ஃபிக்ஸ் இணைத்தொடர் இயக்குநர் இளன் இயக்கி, அவரே கதாநாயகனாக அறிமுகமாகி, தற்போது நெட்ஃபிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் ஒரு சமூக சிந்தனை கலந்த குடும்ப நகைச்சுவைத் திரைப்படமாகும். திருமணத்திற்குப் பிறகு பெண்கள் எதிர்கொள்ளும் அடையாளச் சிக்கல்களையும், ‘வீட்டோடு மாப்பிள்ளை சந்திக்கும் பிரச்சனைகளையும் மைய திரைக்கதையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள வினைத் தொடர் பியார் பிரேமா கல்யாணம்.

நடிகர்கள் :

இளன் – இளன்
சான்வி மேக்னா – பவித்ரா
ராதிகா சரத்குமார் – சந்திரா ராணி
எம்.எஸ்.பாஸ்கர் – ராஜசேகர்
யோகி பாபு – வினோத்
செந்தில் – நதாஸ் தாத்தா
கீதா கைலாசம் – நிர்மலா
இளங்கோ குமரவேல் – சீனிவாசன்
மாறன் @ கணேஷ்
டீப்ஸ் – மைக்கேல்
“ராஜா ராணி” பாண்டியன் – வழக்கறிஞர்
ராஜாமணி – ஆயா
மோகன பிரியா – இளன் அண்ணி
ஆருஷ் – இளன் பிரதர்

தொழில்நுட்பக் குழு:

இயக்கம் & நடிப்பு – இளன்
தயாரிப்பு – ஸ்ரீநிதி சாகர்
வழங்குபவர் – நெட்ஃப்ளிக்ஸ்
இசை – யுவன் சங்கர் ராஜா
கதை மற்றும் திரைக்கதை – நிவேதிதா போஹங்கர்
கூடுதல் திரைக்கதை & வசனங்கள் – இளன் , ஹரிஷ் GY
DOP – தினேஷ் கே பாபு
படத்தொகுப்பு – பிரதீப் இ ராகவ்
தயாரிப்பு வடிவமைப்பாளர் – ஏ. கோபி ஆனந்த் , ஸ்ரீனிவாஸ் கலிங்கா
CEO – ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் – கேஎஸ்ஆர் சந்துரு
நிர்வாக தயாரிப்பாளர் – குமார் கிருஷ்ணசாமி
ஒலி வடிவமைப்பு – சச்சின் சுதாகரன் , ஹரிஹரன் எம் (Sync Cinema)
பாடல் வரிகள் – இளன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்

துபாயில் வேலை செய்து கொண்டிருக்கும் நாயகன் இளான் வேலை பிடிக்காமல் தனது வேலையை விடுவதற்காக பல்வேறு முயற்சிகள் செய்து துபாயிலிருந்து தாய்நாடு திரும்புகிறார் நாயகன் தனது குறிக்கோள் அழகான பெண்ணை காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறார் .

அதே சமயம் எம் எஸ் பாஸ்கர் நாயகனின் அப்பா பல்வேறு வேலைகளை தேடிக் கொடுத்தோம் பொறுப்பில்லாத நபராக உள்ளார் நாயகன் இளன் அப்பொழுது தனது நண்பனின் மகளை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார் எம் எஸ் பாஸ்கர் அவரை சந்திக்க செல்லும் பொழுது தவறுதலாக உணவு விடுதியில் வேறொரு பெண்ணை சந்திக்கிறார் அவரை காதலித்து திருமணம் செய்யவும் முடிவு செய்கிறார் அவர் இணையத்தில் பிரபலமானவர் ஆகையால் அந்த உணவகத்தில் நடக்கும் நிகழ்வை வீடியோவாக எடுத்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்கிறார் இதனை தொடர்ந்து நாயகனுக்கு பல்வேறு தரப்பிலிருந்து ரெட் பிளாக் என்ற பட்டம் கிடைக்கிறது. .

ஆகையால் நாயகன் அந்தப் பெண்ணை பழிவாங்க முடிவு செய்கிறார் நண்பர்களுடன் இணைந்து அந்த பெண்ணை தேடுகிறார் அப்பொழுது சோசியல் மீடியாவில் பிரபலமான நாயகி பவி (சான்வே மேக்னா), நாயகன் இளனை (காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.

ஆனால் திருமணத்திற்குப் பிறகு, தனது தாயையும் சொந்த வீட்டையும் விட்டு மாமியார் வீட்டுக்குச் செல்ல பவி மறுக்கிறார். இதனால், இளன் தனது காதலியின் வீட்டிற்கு சென்று கணவராக வாழ முடிவு செய்கிறார் நாயகன். வேலையில்லாமல் வீட்டோடு மாப்பிள்ளை’ என்பதால் இளன் சந்திக்கும் சிக்கல்கள் மற்றும் பல ஆண்டுகளாக பெண்கள் சந்திக்கும் புகுந்த வீட்டுப் பிரச்சினைகளை திரைக்கதை அமைத்து திரைகள் காண்பவரே ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளார்.

திருமணமான ஆண் வேலை இல்லாமல் மாமியார் வீட்டில் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் அவலங்களை திரைக்கதையாக அமைத்து திரையில் காண்போரை சிந்திக்கவும் ரசிக்கவும் வைத்த விதம் பாராட்டுக்குரியது.

ராதிகா சரத்குமார், எம்.எஸ்.பாஸ்கர், செந்தில் ,யோகி பாபு, கீதா கைலாசம், இளங்கோ குமரவேல் போன்ற அனுபவமிக்க நடிகர்கள் தங்களுக்குக் கொடுத்த கதாபாத்திரங்களை சிறப்பாக நடித்து திரையில் ரசிக்க வைத்துள்ளனர்.

பியார் பிரேமா கல்யாணம் திரைப்படத்திற்கு காதல் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு யுவனின் பின்னணி இசையும் பாடல்களும் கூடுதல் பலம் சேர்த்துள்ளன.

  • பியார் பிரேமா கல்யாணம் விமர்சனம்
  • ராம் அண்ட் லீலா திரை விமர்சனம்
  • இருமுடி கட்டு திரை விமர்சனம்
  • மொத ராத்திரி திரை விமர்சனம்
  • ஒன் திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme